Showing posts with label கருத்துக்களம். Show all posts
Showing posts with label கருத்துக்களம். Show all posts

Wednesday, October 28, 2015

இவர் எழுதிய கதை சினிமாவாகியிருக்கிறது!


வெனிஸ் நகரில் அண்மையில் நடந்து முடிந்த சர்வதேசத் திரைப்பட விழாவில் மனித உரிமைகள் பிரிவில் சிறந்த திரைப்படமாகத் தேர்வாகியுள்ளது இயக்குநர் வெற்றி மாறனின் "விசாரணை' திரைப்படம்.  இதன் திரைக்கதைக்குச் சொந்தக்காரர் கோயம்
புத்தூரைச் சேர்ந்த ஓர் ஆட்டோ ஓட்டுநர் என்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அவர் மு.சந்திரகுமார்.
  தனது அனுபவங்களை 5 நூல்களாகவும், ஏராளமான கட்டுரைகளாகவும், சிறுகதைகளாகவும் படைத்துள்ளார் அவர்.
 இனி அவருடனான அனுபவப் பகிர்வுகள்:
""கோவை பாலுரங்கநாதபுரம் எனது பூர்வீகம். 10-ம் வகுப்பு வரை பயின்ற நான், மெக்கானிக்காக வேலையைத் தொடங்கினேன். பிறகு கட்டடத் தொழில், மூட்டைத் தூக்குதல் போன்ற உடல் உழைப்புத் தொழில்களைச் செய்தேன். பின்னர் ஹோட்டல் தொழிலாளியாக பல ஊர்களில் பணியாற்றினேன். நிலையான தொழில் வேண்டும் என்பதால் ஆட்டோ ஓட்டத் தொடங்கினேன்.
சிறுவயதில் தினமும் மாலையானதும் கை-கால் கழுவி, விளக்கு வைத்து, படிக்க வேண்டும் என்ற பழக்கம், வாசிப்பு ரசனை உள்ள எனது தாத்தா, எனது அம்மாவிடம் இருந்து எனக்குக் கற்பிக்கப்பட்டது. திருமந்திரம், திருவருட்பா, சிலப்பதிகாரம், அசுவமேத யாகம், பஞ்ச தந்திரக் கதைகள் போன்ற ஏராளமான நூல்கள் வீட்டில் இருந்தன.
10-வது வயதிலேயே இவற்றை முடித்த நான் பிறகு படக்கதைகள், அம்புலிமாமா, கோகுலம் தொடங்கி, கல்கி, சாண்டில்யன், ஜெயகாந்தன், அசோகமித்ரன் என வளர்ந்து, உலக இலக்கியங்களான மாக்சிம் கார்க்கி, தஸ்தாவெஸ்கி, டால்ஸ்டாய் என ரசனை  மாறியது.

 
 கதைகளில் இருந்து அரசியலுக்கும், அங்கிருந்து தத்துவத்துக்கும், பின்னர் மானுட விடுதலையை நோக்கியும் என் பாதை விரிந்தது.
 கடந்த காலம் எனக்குக் கற்பித்த துன்ப, துயரம், அனுபவங்கள் காரணமாகவும், அந்த புரிதலின் அடிப்படையிலும் ஆட்டோ தொழிலாளி பணியுடன் இடதுசாரி இயக்கங்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அதனால், தொழிலாளர்கள், அவர்களின் உரிமைகள், சாதாரண மனிதர்களின் மீதும் அவர்களின் அடிப்படை உரிமைகள் மீதும் அதிகாரம் செலுத்தும் பிரச்னைகளுக்கு எதிரான போராட்டங்கள் அவசியமானது.
 அப்போது, போராட்டங்களுடன் இணைந்து மக்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமே என்ற உந்துதல் ஏற்பட்டது.
 ஏற்கெனவே நான் படித்தவற்றை, மக்களிடம் கூற வாய்ப்பு இருந்தாலும் எனது சொந்தக் கருத்தைப் பேசுவது, ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக் குரலாக இருக்கும் என்று
கருதினேன்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி ஆந்திரம் சென்றேன். குண்டூர் மாவட்டம் கொத்தப்பேட்டையில் ஒரு கடையில் வேலை செய்தேன். பகலில் வேலை, இரவில் சினிமா, சாலையோரத்தில் தூக்கம் என்று மொழியற்ற சூழலில், ஆதரவற்ற சில நண்பர்களுடன் வாழ்ந்தேன். சந்தேகத்தின் அடிப்படையில் 4 நண்பர்களுடன் பிடிபட்ட நான், காவல்நிலையத்தில் 13 நாள் சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டு கொடூரத் தாக்குதல்களுக்கு ஆளானேன். எனது குண்டூர் சிறை அனுபவங்களை கடந்த
2005-இல் "லாக்கப்' என்ற பெயரில் நூலாக எழுதினேன். அது 2006-ல் பதிவுகள் பதிப்பகம் மூலம் வெளியானது.
 லாக்கப் நூல் வெளிவந்துமே கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. முற்றிலும் வேறுபட்ட கதைக் களத்தை கொண்டிருப்பதாக கலை, இலக்கியவாதிகளால் பேசப்பட்டது. எனது பெயரும் ஆட்டோ சந்திரனில் இருந்து மாறி லாக்கப் சந்திரனானது.
அநீதி, ஆதிக்கம், அதிகாரம், தனிமைப்படுத்தப்பட்ட மானுடம் இவற்றை அடையாளம் கொண்டு சொந்த வாழ்வு அனுபவத்தையே லாக்கப்பில் பதிவு செய்திருந்தேன்.
இதனால், லாக்கப்பை அடுத்து, பூமியை கொலைக்களமாக்கும் அமெரிக்கா, கோவையில் ஜீவா, எரியும் பட்டத்தரசி, கட்டுதளையினூடே காற்று போன்ற நூல்களும் சிறுகதைகள், கட்டுரைகளும் உருவாகின. லாக்கப்பின் தாக்கத்தின் காரணமாகவே "அழகு தொடட்டுமா?' என்ற தலைப்பில் விளிம்புநிலை பெண்களின் உணர்வுகள், மனநிலையை முன்வைக்கும் மற்றொரு நூல் உருவாகி வருகிறது.
 "லாக்கப்'  எனது நண்பர் தங்கவேலன் மூலமாக இயக்குநர் வெற்றிமாறன் கைகளுக்குக் கிடைத்தது. நான்கு கருங்கல் சுவருக்குள் நடந்து முடிந்த கொடூரம், யாருக்கும் கேட்காது என்று நினைத்திருந்த எனது அவலக் குரல் இப்போது எல்லோருக்கும் கேட்கத் தொடங்கியுள்ளது.
 திரைக் கதைக்கு என்று ஒரு மொழி இருப்பதைப் போல் திரை மொழியில்தான் படம் உருவாகியுள்ளது. "விசாரணை' எதை உலகிற்கு உரக்கச் சொல்ல வேண்டுமோ அதை அப்படியே வெளிக் கொண்டு வந்துள்ளது.
 சர்வதேச திரைப்பட விழாவில் 2 ஆயிரம் படங்களுடன் விசாரணையும் திரையிடப்படும் என்ற தகவலே எனக்குப் பெருமையை ஏற்படுத்திய நிலையில், கதாசிரியர் என்ற முறையில் என்னையும் அழைத்துச் சென்று மேடையில் அறிமுகப்படுத்தினார் வெற்றி மாறன். அங்கு திரையிடப்பட்ட மற்ற படங்களைப் பார்த்த பிறகு விசாரணை படத்துக்கு உயரிய விருதான தங்கச் சிங்கம் விருது கிடைக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் மனித உரிமைகள் பிரிவில் விருது கிடைத்தது'' என்றார்.
படங்கள்: வீ.பேச்சிக்குமார்
நன்றி :- தினமணிக் கதிர், 25-10-2015

வறுமையைப் பாடும் கவிஞன்

மு.சுயம்புலிங்கம் | ஓவியம்:முத்து


மு.சுயம்புலிங்கம் | ஓவியம்:முத்து

பாரதியின் ‘வசன கவிதைகள்’ தமிழ்க் கவிதையின் இறுக்கத்தைத் தகர்த்தது. அதன் பிறகு ந.பிச்சமூர்த்தி, க.நா.சுப்ரமண்யம் போன்றோர் மேற்கில் எழுதப்பட்ட கவிதைகளை அடிப்படையாகக் கொண்டு இங்குப் புதுக்கவிதையைப் படைத்தனர். அவர்களுள் க.நா.சு. முற்றிலும் யாப்பைக் களைந்து சுத்த உரைநடையில் கவிதைகளை எழுதிப் பார்த்தார். இத்தன்மையால் தொன்மை கொண்ட தமிழ்க் கவிதைமரபு, புதுக்கவிதை வழியாகப் புதிய சமூகத்தின் குரல்களுக்கு வழிவிட்டது.

கிராமப்புற வாழ்வியலை, வட்டாரக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் அம்சங்கள் பாரதி காலம் தொட்டே தமிழ்க் கவிதையில் வெளிப்பட்டுவருபவை. ஞானக்கூத்தனின் சில கவிதைகளிலும் இதைப் பார்க்க முடிகிறது. கலாப்ரியா, விக்ரமாதித்யனிடம் வலுப்பெற்ற இந்தப் போக்கு எண்பதுகளின் இறுதியில் எழுதவந்த மு. சுயம்புலிங்கத்தின் கவிதைகளில் முழு வீச்சுடன் வெளிப்பட்டது. எழுத்தாளர் கோணங்கி, சுயம்புலிங்கத்தின் சிறப்பிதழாகக் கல்குதிரை இதழைக் கொண்டுவந்தார். ‘நாட்டுப் பூக்கள்’ என்னும் தலைப்பிலான அந்தத் தொகுப்பின் மூலம் ‘நாட்டுப் பூக்கள்’ சுயம்புலிங்கம் என்றே அவர் அறியப்பட்டார்.

தெற்கத்தி ஆன்மாக்களின் வெளிப்பாடு

மு.சுயம்புலிங்கத்தின் கவிதை மொழி, வட்டார வழக்கிலானது. கரிசல் நிலத்தில் ஈரம் பிடித்த சொற்கள் அவை. அது கி.ராஜநாராயணனின் கரிசல் மொழியின் நவீன வடிவம் எனலாம். கவிதைக்கெனப் பிரத்யேக சொற்களை அவர் தேடிச்செல்லவில்லை. சுதந்திர இந்தியாவின் கரிசல் கிராமத்தைத் தன் மொழியின் மூலம் துலக்கப்படுத்தியவர் கி.ரா. சுதந்திரக் கனவுகள் நொறுங்கிப் போன, நெருக்கடி நிலைக்குப் பிறகான கரிசல் நிலத்தைத் தன் கவிமொழியின் மூலம் காட்சிப்படுத்தியவர் சுயம்புலிங்கம்.

கரிசல் நிலத்தின் வறுமைதான் சுயம்புலிங்கத்தின் உரத்த குரலாக அவரது மொத்தக் கவிதையிலும் தொடர்ந்து வெளிப்படுகிறது. வறுமையின் பல்வேறு பரிமாணங்களைக் கவிக் காட்சிகள் மூலம் சித்திரிக்கிறார் சுயம்புலிங்கம். சோளக் கதிர்களைத் திருடிப் பிடிபடும் பெண், வானத்தை மிதிப்பதுபோலக் காலைத் தூக்கிக் கிடக்கிறாள் என்கிறது ஒரு கவிதை. பசியால் அழும் குழந்தை பூமியை மிதிக்கிறது. பூமி அதை வாங்கிக் கொள்கிறது என்கிறது அவரது மற்றொரு கவிதை. கரிசல் நிலத்தில் சூரியனைப் போல இறங்கி விளையாடுகிறது வறுமை. இந்தப் பஞ்சத்தைப் போக்க அரசு என்ன செய்தது எனக் கவிதை வழியாக சுயம்புலிங்கம் கேள்வியும் எழுப்புகிறார்.
சுயம்புலிங்கத்தின் கவிதைகளுக்குத் தீர்க்கமான அரசியல் பார்வை உண்டு. ஆனால் அதை அந்தரக்கனியாக மாற்றாமல் நமக்கு அருகே வைக்கிறார். தண்ணீரால் வயிறு ஊதப்பட்ட அடிமாட்டைத் தமிழ்ச் சமுதயாம் என்கிறார். கம்யூனிஸ்டுகளையும் ஊர் மடத் திண்ணையின் மூத்த கிழடுகளின் குரல் கொண்டு விமர்சிக்கிறார். கம்யூனிஸ்டுகள் முதலில் ஒரு தொண்டையில் பேச வேண்டும் என்கிறார்.

மக்களின் குரலில் கவிதை

தமிழில் சுயம்புலிங்கம் அளவுக்குப் பாட்டாளிவர்க்கக் குரலைப் பதிவுசெய்த கவிஞன் இல்லை எனலாம். ‘நாங்கள் தொள்ளாளிகள்/பீ மணக்கும் கிராமங்களில்/ வறுமை எரிக்கும் குடிசைகளில்/... முடங்கிப் போனோம்” என்கிறார். இவரது கவிதையில் கதைகளுக்கு இணையான மாந்தர்கள் வருகிறார். எல்லோரும் பாட்டாளிகள். வானத்தின் மேகங்களைப் பணியவைக்க முயலும் கரிசல் காட்டு விவசாயி, நகரின் ‘நடுசென்டரில்’ வசிக்கும் வீடற்றவன், குப்பைக் குவியல் இரைதேடும் தாய், பனையேறி, பசியால் அழும் சிறுவர்கள் என, வந்துகொண்டே இருக்கிறார்கள்.
அதுபோல வெள்ளைச் சோறும் சுயம்புலிங்கத்தின் கவிதைகளில் ஒரு கனவு போல வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. பஞ்சம், கரிசல் நிலங்களைச் சோற்றுக்கு அலையவைத்த கதையை இவரது கவிதைகள் காவிய துயரத்துடன் பதிவுசெய்கின்றன. பஞ்சம் பிழைத்தல் என்பது அந்தக் காலகட்டத்தில் கரிசல் நில மக்களை இடப்பெயரச் செய்த மாபெரும் சமூக நிகழ்வு. அந்தக் காலகட்டம் வெள்ளைச் சோற்றை ஒரு கனவாக்கிவிட்டது என்பதை இவரது ஒரு கவிதை பதிவுசெய்கிறது, “நுகர்வோர்/கூட்டுறவுக் கடையில்/கொள்ளை மலிவு/அரிசி./மூன்று வேளையும்/நாங்கள்/நெல்லுச் சோறு தின்கிறோம்./எங்கள் வயிறெல்லாம்/அழகான தொப்பை.”
சுயம்புலிங்கம் கவிதைகளின் பின் பகுதியில் பஞ்சம் பிழைக்க வந்த சென்னை நகர வாழ்க்கை பதிவாகியிருக்கிறது. “கொழுத்த உடம்பும் கறுத்த மேனியுமாக/நெடுஞ்சாண் கிடையாகப்/படுத்துக் கிடக்கிறது அண்ணா சாலை” எனச் சென்னை நகரத்தை விவரிக்கத் தொடங்குகிறார் சுயம்புலிங்கம். நகரம் மனிதர்களை எப்படி அணுகுகிறது என்பதையும் இவரது கவிதை விவரிக்கிறது. இது ஒரு கிராமத்து மனிதனின் வியப்புடனும் விரக்தியுடனும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மின்சார விளக்குகள் பூத்துக் குலுங்கும் பரபரப்பான நகரத்தில் கவிஞனின் மனம் ப்ளாட்பார வாசிகளிடமும், பேப்பர் பொறுக்குபவர்களிடமும் சிநேகம் கொள்கிறது. அவர்களுக்கு மேலே விழுந்துகொண்டிருக்கும் நகரமயமாக் கலை, உலகமயமாக்கலை, மழையை, வெயிலை பாலிதீன் கொட்டகைகளுக்குள் இருந்து எப்படித் தாங்கிக்கொள் கிறார்கள் எனச் சொல்கிறார் சுயம்புலிங்கம்.

பாட்டாளிகளின் வறுமையை, துயரத்தைச் சொல்லும் இவரது கவிதைகளுக்கு அவர்களைப் புரட்சி ஒருங்கிணைக்கும் கூக்குரலும் உண்டு. “போராட்டமே வாழ்க்கை/விலங்கை நொறுக்கு/ நாம் மனிதர்கள்” என்கிறார். இன்னொரு கவிதையில் சூரியனை வீழ்த்தும் அறிவியலைக் கற்போம் என அழைக்கிறார். சமூக, விஞ்ஞான மாற்றங்களை ஒரு போர் போல சித்திரிக்கும் சுயம்புலிங்கம் அவற்றை வீழ்த்த எளிய மனிதர்களின் சூத்திரங்களைக் கவிதையின் மூலம் தயாரிக்கிறார். ஆனால் இருபத்தியொன்றாம் நூற்றாண்டு எல்லோரையும் வெளியேற்றிவிடும் சூழலில், “எதுவும் கிடைக்காதபோது/களிமண் உருண்டையை வாயில் போட்டு/தண்ணீர் குடிக்கிறோம்/ஜீரணமாகிவிடுகிறது/எங்களுக்கு ஒரு குறையும் இல்லை/நாங்கள் சந்தோஷமாய் இருக்கிறோம்” எனத் தன் கவிதையைச் சுருட்டிக்கொள்கிறார்.

சுயம்புலிங்கத்தின் கவிதைகளில், வறுமையில் அழும் குழந்தையின் கால்பட்டு பூமி, சூரியன், மேகங்கள் போன்ற இயற்கைப் பேருக்கள் கலங்குகின்றன. ஒட்டுமொத்தமாக பார்த்தால் வறுமை செய்யப்போகும் புரட்சியின் முரசொலியாக இவரது கவிதைகள் இருக்கின்றன.
மு.சுயம்புலிங்கம், விளாத்திகுளம் அருகே வேப்பலோடை என்னும் சிற்றூரைச் சொந்த ஊராகக் கொண்டவர். நாட்டுப் பூக்கள் என்னும் தொகுப்பின் மூலம் பரவலான கவனம் பெற்ற இவர் சென்னையில் வசித்துவருகிறார். உயிர்மை வெளியீடாக அவரது கவிதைகள் தொகுக்கப் பட்டு ‘நிறம் அழிந்த வண்ணத்துப் பூச்சிகள்’ என்னும் பெயரில் வெளிவந்துள்ளது.
தமிழன்
கலைஞன் என்கிற
வார்த்தையைச் சுற்றி
கூகை இருட்டு அடைகிறது
புரட்சி என்கிற
வார்த்தையைச் சுற்றி
ஊத்தை படிகிறது
தமிழன் என்கிற
வார்த்தையைச் சுற்றி
உறக்கம் பாய் விரிக்கிறது
மக்கள் என்கிற
வார்த்தையைச் சுற்றி
வறுமையும் துப்பாக்கியும்
பெருமூச்சு விடுகிறது
தொடர்புக்கு: jeyakumar.r@thehindutamil.co.in

நன்றி :- தி இந்து

Thursday, October 15, 2015

நம் மருத்துவத்துக்கு நோபல் கிடைக்குமா? -பி.ஏ.கிருஷ்ணன்



சித்த மருத்துவம் பற்றிய தெளிவான புத்தகங்கள் இல்லாததற்கு மத்திய - மாநில அரசுகளே காரணம்.

இந்த வருடம் மருத்துவத்துக்கான நோபல் பரிசு சீனத்தைச் சேர்ந்த டு யுயு என்ற 85 வயது மூதாட்டிக்குக் கிடைத்திருக்கிறது. சீனாவுக்கு அறிவியல் துறையில் கிடைத்திருக்கும் முதல் பரிசு இது. மலேரியாவுக்கு எதிரான மருந்தைக் கண்டுபிடித்ததற்காக வழங்கப்படுகிறது. டு யுயு, ஆர்டிமிசியா அனுவா (Artemisia Annua) என்ற செடியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஆர்டிமிசினின் என்ற மலேரியா ஒழிப்புச் செயலாற்றும் கூற்றை (active component) கண்டுபிடித்து, அதைப் பெருமளவில் தயாரிக்கும் வழிமுறையை வகுத்ததற்காகப் பரிசு பெறுகிறார்.

ஆர்டிமிசியா என்ற பெயருடையவர் கிரேக்க வரலாற்றில் புகழ் பெற்ற பெண் வீரர். கப்பற்படைத் தலைவர். உலக ஓவிய வரலாற்றிலும் ஆர்டிமிசியா என்ற பெண் ஓவியருக்கு முக்கியமான இடம் இருக்கிறது. எனவே, ஆர்டிமிசினினைக் கண்டுபிடித்தவரும் ஒரு பெண்ணாக இருப்பது மிகவும் பொருத்தம்.

கண்டுபிடிக்கப்பட்ட கதை

வியட்நாமில் நடந்த போரில், போர்க்களத்தில் மடிந்த வீர்ர்களை விட மலேரியாவால் மடிந்த வீரர்களே அதிமாக இருந்தார்கள். கொய்னா அதிக பலனை அளிக்கவில்லை. ஹோசிமின் மாவோவைக் கேட்டுக்கொண்டதன் பேரில் சீனாவில் மலேரியாவுக்கு எதிரான ஆராய்ச்சி தீவிரமாக நடந்தது. ஆர்டிமிசியா என்று அறியப்படும் செடிக்கு மலேரியா எதிர்ப்புத் தன்மை இருப்பதை சீனர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிந்திருந்தனர். 2400 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சீன மருத்துவப் புத்தகம் அதைப் பற்றிப் பேசுகிறது. ஆனால், செடியின் உண்மையான பயன் சரிவரத் தெரியவில்லை. அதைப் பயன்படுத்தி சிலர் குணமடைந்தார்கள். பலர் குணமடையவில்லை. டு யுயு ஆர்டிமிசினின் என்ற செயலாற்றும் கூறைச் செடியிலிருந்து பிரித்தெடுத்தார். செயலாற்றும் கூறைப் பிரித்தெடுப்பதென்பது சாதாரணமான செயலல்ல. பல வருடங்கள் சோதனைச்சாலையில் உழைக்க வேண்டும். இந்த உழைப்பின் வெற்றிக்குத்தான் பரிசு.

பரிசு தரும் செய்திகள்

இந்தப் பரிசு, இரு முக்கியமான செய்திகளை நமக்குத் தருகிறது. முதலாவது, தற்கால அறிவியலுக்கு மேற்கத்திய மருத்துவ முறை, பாரம்பரிய மருத்துவ முறை என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. பாரம்பரிய மருத்துவமுறையில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதாலேயே அதைச் சந்தேகக் கண்ணோடு நோக்குவதும் கிடையாது. இரண்டாவது, எந்த மருந்தையும் தெளிவாக வகுக்கப்பட்ட வரைமுறைகளின் கீழ் பரிசோதனை செய்து, அதன் வீரியத்தை உறுதிசெய்தால் அதைத் தற்கால அறிவியல் நிச்சயம் ஏற்றுக்கொள்ளும்.

நமது நிலை என்ன?

ஆர்டிமிசினின் கண்டுபிடித்த பிறகு டு யுயு பல வருடங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். குறிப்பிடத்தக்க வெற்றி ஏதும் கிட்டவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தாவரத்திலிருந்து புது மருந்து கண்டுபிடிப்பு என்பது பல ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது. அதற்கு மிகவும் தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும்.

இந்தியாவிலும் ஆயுர்வேத, சித்த மருந்துகளின் செயலாற்றும் கூறுகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல விஞ்ஞானிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்கள் வெற்றிபெரும் வாய்ப்பு இருக்கிறதா? ஆயுர்வேதத்தை அப்புறம் பார்க்கலாம். தமிழ்நாட்டுக்கே சொந்தமான சித்த மருத்துவத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்.

பப்மெட் (pubmed) என்ற வலைத் தேடல் கருவி ஒன்று இருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எத்தனை பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. எந்த அறிவியல் பத்திரிகையில் பதிக்கப்பட்டிருக் கின்றன என்பதை அது நமக்குத் துல்லியமாகத் தெரிவிக்கின்றது. இதில் தேடினால், சித்த மருத்துவத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் பிரசுரமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் 153 மட்டுமே. ஆயுர்வேதத்தில் 2,471 ஆராய்ச்சிக் கட்டுரைகள். இதே நேரத்தில் சீனப் பாரம்பரிய மருத்துவக் கட்டுரைகள் 32,000-க்கும் மேல் வந்திருக்கின்றன.

சித்த மருத்துவக் கட்டுரைகளை மேலும் ஆராய்ந்தால், எலி போன்ற மற்ற உயிரினங்களின் மீது செலுத்திச் செய்யப்பட்ட மருந்துப் பரிசோதனைகள் பற்றிய கட்டுரைகள் 45 மட்டுமே. இவற்றில் சில கட்டுரைகள் சித்த மருந்தின் விஷத் தன்மையைப் பற்றியவை.

சித்த மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகள் வருகின்றன என்பதே வரவேற்கத்தக்க செய்திதான். ஆனால், ஏன் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மிகக் குறைவாக இருக்கின்றன? ஏன் அவை குறிப்பிடத்தக்கவையாக இல்லை? இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. சிலவற்றை ஆராய்வோம்.

ஆயுஷ் வலைதளம்

மத்திய அரசின் ஆயுஷ் வலைதளத்தில் எழுதப்பட்டிருக்கும் சித்த மருத்துவத்தின் வரலாற்றைப் படித்துப்பார்த்தால், அறிவியலுக்கும் இந்தத் துறையிலிருந்து அரசுக்கு ஆலோசனை அளிப்பவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையோ என்ற சந்தேகம் நமக்கு வரலாம். அது கூறுவதைக் கேளுங்கள்:

`பாரம்பரியம் சிவபெருமான் சித்த மருத்துவ முறையை பார்வதிக்கு அளித்தார் என்றும் அவர் அதை நந்தி தேவருக்கு அளிக்க, அவர் அவற்றைச் சித்தர்களுக்கு அளித்தார்' என்றும் சொல்கிறது.

`சித்தர்கள் அந்தக் காலத்தின் மிகப் பெரிய விஞ்ஞானிகள்.’ இப்படிச் சொல்லிவிட்டு இதையும் பேசுகிறது!

‘பாரம்பரியம் சித்த மருத்து முறையைக் கண்டுபிடித்தவர் அகத்தியர் என்று சொல்கிறது. அவர் எழுதிய புத்தகங்கள் இன்றும் மருத்துவத்துக்கும் அறுவை சிகிச்சைக்கும் பாட நூல்களாக இருக்கின்றன.’

வேறு எந்தத் தகவல்களும் இல்லாமல் ஒரு மருத்துவமுறையின் வரலாற்றை இப்படி எழுதி, அதை மத்தியஅரசு வலைதளத்தில் கூசாமல் பதிவுசெய்வது இந்தியாவில் மட்டுமே நடக்கக் கூடிய அதிசயம்.

உண்மையிலேயே பாட நூல்களின் நிலைமை என்ன?

சித்த மருத்துவ நண்பர் ஒருவரிடம் கேட்டதில் அவர் சொன்னது: ‘சித்த மருத்துவம்’, ‘நோய்களுக்குச் சித்தப் பரிகாரம்’என்று தமிழக அரசால் வெளியிடப்பட்ட இரண்டு நூல்கள் இருக்கின்றன. ஆனால், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் பாடப்புத்தகங்களில் எந்த மாறுதலும் செய்யப்படவில்லை.

எல்லா மருந்து முறைகளுக்கும் மருந்தியல் குறிப்பு நூல் (pharmacopoeia) ஒன்று இருப்பது மிகவும் அவசியம். இந்த நூல் அந்தந்த முறைகளில் உபயோகிக்கப்படும் மருந்துகளைப் பற்றியும் அவற்றின் வேதியியல் கூறுகளைப் பற்றியும் விரிவான தகவல்களைத் தரும். சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரையில் இந்தப் புத்தகத்தின் முதல் பகுதி வெளிவந்திருக்கிறது. இரண்டாம் பகுதி, மூன்று வருடங்களுக்கு முன் பதிப்பிக்கப்பட்டு விட்டதாம். ஆனாலும் இன்னும் பொதுமக்களுக்கோ சித்த மருத்துவர்களுக்கோ கிடைப்பதில்லை என்று சொல்கிறார்கள். நான் பார்த்த அளவில் முதல் பகுதி 73 செடி, வேர், மரப்பட்டை, பழம் போன்றவற்றைப் பற்றிய குறிப்புகளை மட்டும் தருகிறது. அவற்றின் கலவைகளால் தயாரிக்கப்படும் மருந்துகளைப் பற்றி எந்தத் தகவலையும் தருவதில்லை. இது முழுமை பெறாத முயற்சி. எனவே, சித்த மருத்துவர்களுக்குச் சந்தேகம் வந்தால் அதைத் தீர்த்துக்கொள்வதற்கு எந்த நம்பகத்தன்மை கொண்ட புத்தகமும் கிடையாது என்பது தெளிவு.

இந்த நிலைமைக்கு மத்திய, மாநில அரசுகள் காரணம் என்றாலும், சித்த மருத்துவத்தில் இன்று முன்னிலையில் இருப்பவர்களும் முக்கியமான காரணம் என்று நான் சொல்லத் தயங்க மாட்டேன். படிப்பதற்குச் சரியான புத்தகங்கள் இல்லாமல், மருந்துகளின் பயன்களைப் பற்றிய சரியான குறிப்பு நூல் இல்லாமல் படித்து வெளியில் வரும் மாணவர்களிடம் ஆராய்ச்சியைப் பற்றிய தெளிவான புரிதல்களை எதிர்பார்ப்பது நியாயம் இல்லை. அவர்கள் முனைந்து ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கவும் முடியாது.

நோபல் பரிசை விடுங்கள். எந்தக் குறிப்பிடத்தக்க பரிசும் எட்டாத் தொலைவில்தான் இருக்கிறது.

- பி.ஏ. கிருஷ்ணன், ‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ ஆகிய நாவல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: tigerclaw@gmail.com

நன்றி:-தி இந்து

பாத யாத்திரை -வீடில்லாப் புத்தகங்கள்



திருச்செந்தூருக்கும், பழநிக்கும், வேளாங் கண்ணிக்கும் பாதயாத்திரை போகிறவர்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

பாதயாத்திரையின் நோக்கம் வழிபாடு என்றாலும் அதன் வழியே அடையும் அனுப வம் உடலையும் மனதையும் மாற்றிவிடக் கூடியது. கிடைத்ததை உண்டு, சூழ்நிலைக்கு ஏற்ப கிடைத்த இடத்தில் படுத்து உறங்கி, பலதரப்பட்ட மக்களையும் ஊர்களையும் கடந்து செல்வது அபூர்வமான அனுபவம்!

பெங்களுரு தேசிய விமான ஆய்வுக் கூடத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஆ.பெருமாள். இவர் காட்டி சுப்ரமண்யா, திருப்பதி, மந்திராலயா போன்ற கோயில் களுக்கு பாதயாத்திரையாகப் போய் வந்த அனுபவத்தை சுவைபட எழுதியிருக்கிறார்.

‘காலச்சுவடு’ பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘பாதயாத்திரை’ என்ற நூல் வித்தியாசமான பயண நூலாகும். சுவாச ஒவ்வாமை நோயில் அவஸ்தை பட்டுவந்த பெருமாள், தனது பாதயாத்திரையின் மூலம் எப்படி நோய் நீங்கினார் என்பதை வாசிக்கும்போது வியப்பாக இருக்கிறது.

தனது பயணம் பற்றி விளக்கிக் கூறும் பெருமாள், ‘நடப்பது ஒரு சுகம். அதை நடந்து பார்த்தவர்கள் மட்டுமே உணர முடியும் பாதயாத்திரையின்போது கிடைப்பதை உண்ண வேண்டும். சூழ்நிலையையொட்டி உறங்க வேண்டும். வழியில் சந்திக்கும் மனிதர்கள் உங்களுக்கு சந்தோஷமும் தரலாம், சங்கடமும் தரலாம். ஆகவே, இதற்கெல்லாம் உடலும் உள்ளமும் பக்குவப் பட வேண்டும். பயணம் செய்பவர்களுக்கு ஒரே அறிவுரை நடங்கள் சுகப் படுங்கள்’ என்பதே என்கி றார்.

இவரது முதல் பயணம் எப்படி தொடங்கியது? பெருமாளின் நண்பரான நாகராஜ் 1994-ம் ஆண்டு பெங்களுருவில் இருந்து தர்மஸ்தலா வரை 330 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொண்டு திரும்பினார்.

அந்த ஆசை பெருமாளுக்கும் தொற்றிக் கொண்டது. ஆனால், சுவாச ஒவ்வாமையால் எப்படி நீண்ட தூரம் நடக்க முடியும் என உள்ளூற பயம். இதற்காக முதல் நடைப்பயணமாக பெங்களுருவில் இருந்து 60 கிலோ மீட்டரில் உள்ள காட்டி சுப்ரமண்யா கோயிலுக்குப் போய்வருவது என முடிவு செய்துகொண்டார். திடீரென ஒருநாளில் மிக நீண்ட தூரம் நடக்க முடியாது என்பதால் பயணத்தின் முன்பாகவே தினமும் சில மைல்கள் நடந்து போய்வரத் தொடங்கினார். இதனால் நடப்பது எளிதாக மாறியது.

தன்னைப் போலவே கோயிலுக்குப் பாத யாத்திரை மேற்கொள்ளும் குழு ஒன்றுடன் இணைந்துகொண்டார் பெருமாள். நீண்ட தூரம் நடந்து பழக்கம் இல்லாததால் பயணம் தொடங்கிய முதல் நாளிலேயே உடல் சோர்ந்துவிட்டது. ஆனாலும் மனஉறுதியோடு நடந்து கொண்டேயிருந்திருக்கிறார்.

இரவு ஒரு வீட்டில் ராத்தங்கல். அங்கே ராகிக் களியும் குழம்பும் சாப்பிடத் தந்தார்கள். அதை சிரமத்தோடு சாப்பிட்டு முடித்து மொட்டை மாடியில் காற்றாட உறங்கினார். மறுநாள் அதிகாலையிலே நடைப்பயணம் தொடங்கியது.

அதிகாலையில் நல்ல காற்றையும் காலை வெயிலையும் அனுபவித்துக் கொண்டு நடந்தார். ஆனால், பலரும் வேகமாக அவரை தனியே விட்டு நடந்து போய்விட்டார்கள். மாலையில் அயர்ந்துபோய் கோயிலைப் போய்சேர்ந் தார். அவருக்காககாத்தி ருந்தவர்களுடன் வழிபாட் டுக்காக சென்றார்.

அடுத்தது திருப்பதி பாத யாத்திரை. முந்தைய பயண அனுபவம் இந்த முறை நடப்பதில் சிரமம் ஏற்படுத் தவில்லை. ஒவ்வொரு ஊராகத் தங்கி கிடைத்த உணவை உண்டு நடந்தார். மணிக்கு 6 கிலோ மீட்டர் நடப்பவர்கள் வழியில் எங்காவது இடம் கிடைத்தால் உறங்கி ஓய்வு எடுப்பார்கள். ஆனால், பெருமாள் மணிக்கு 4 கிலோ மீட்டர் நடக்க கூடியவர் என்பதால் ஆங்காங்கே சில நிமிடங்கள் ஒய்வு எடுத்துக்கொண்டு அசதியோடு நடந்து கொண்டேயிருந்தார்.

தசைப் பிடிப்புதான் நடைப்பயணத்தின் பெரிய பிரச்சினை. உணவு ஒத்துக்கொள் ளாமல் போவதால் ஏற்படும் வயிற்றுப் பிரச்சினைகளும் காய்ச்சலும் வராமல் பார்த்துக்கொண்டார்,

கால்வலி அதிகமாகவே ஒரு இடத்தில் அரை மணி நேரம் ஒய்வு எடுத்தார். ஆனால், மீண்டும் நடப்பதற்கு எழுந்து கொள்ள முயன்றபோது கால்களை அசைக்க முடிய வில்லை. தசைகள் பிடித்துக் கொண்டு விட்டன. லேசான காய்ச்சல் உண்டாகியிருந்தது. துணைக்கு யாருமில்லை. வேறுவழியின்றி அந்த வழியே வந்த இரண்டு இளைஞர்களிடம் உதவி கேட்டு சிரமப்பட்டு நாங்கலி என்ற ஊரை அடைந்தார். அன்றிரவு நன்றாக உறங்கி எழுந்தார். மறுநாள் காலையில் உடல் நலம் ஒரளவு தேறியிருந்தது. மனஉறுதியோடு மீண்டும் நடைப்பயணத்தை மேற்கொண்டார்.

அதிகாலை பயணமும் மலையேற்றமும் அவரது நுரையீரலை வலுப்படுத்தியது. பல ஆண்டுகளாக அவருக்கு இருந்துவந்த சுவாச ஒவ்வாமையின் தீவிரம் மிகவும் குறைந்துபோனது. தனது பயணத்தின் வழியே மனமும் உடலும் பண்பட்டுவிட்டன என்கிறார் பெருமாள்.

இரண்டு நடைப்பயணங்கள் தந்த உத்வேகம் காரணமாக பெங்களுருவில் இருந்து 400 கிலோ மீட்டர் தூரம் உள்ள மந்திராலயா நோக்கிய பாதயாத்திரைக்கு அடுத்து திட்டமிட்டார்.

இந்தப் பயணத்தில் தங்களைப் போலவே ஆயிரக்கணக்கான குழுக்கள் நடந்து போய்க் கொண்டேயிருப்பதை கண்டார். ஆகவே, எங்கேயும் உணவுக்கும் உறங்கும் இடத்துக்கும் பிரச்சினை வரவேயில்லை. பொதுமக்களும் குடிநீரும், பழங்களும் தந்து உதவி செய்தார்கள்.

தனது நடைப்பயணத்தில் தங்கிய வீடுகள், சந்தித்த மனிதர்களை சுவைபட விவரிப்ப தோடு பாதயாத்திரை குழுக்களுக்குள் நடக்கும் சண்டைகள், குருவாக வழிநடத்து பவர் செய்யும் அட்டூழியங்கள் என யாவற் றையும் வெளிப்படையாக பகிர்ந்துகொண்டி ருக்கிறார் பெருமாள்.

வயது வேறுபாடுகளைக் கடந்து கூட்டம் கூட்டமாக மனிதர்கள் புனித யாத்திரையாக நடந்து கொண்டேயிருப்பது நூற்றாண்டு களாக தொடர்ந்து வருகிறது. நடையால் மனிதர்கள் ஒன்று சேருகிறார்கள், வலுப்பெறு கிறார்கள் என்பது சந்தோஷம் அளிக்கவே செய்கிறது.

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com

நன்றி :- தி இந்து

Monday, January 12, 2015

மாதொருபாகன் படைப்பாளி பெருமாள் முருகனிடம் சிறப்புப் பேட்டி - அ.ப.இராசா

மாதொருபாகன்' நாவல் தொடர்பாக எழுந்த சர்ச்சை, தற்போது விஸ்வரூபம் எடுத்து உள்ளது. 

தமிழகத்தில், ஓரு எழுத்தாளனை கண்டித்து, கடையடைப்பு நடப்பது இதுவே முதல்முறை. ஏன் இந்தியாவில் கூட, இதுவே முதல்முறையாக கூட இருக்கலாம். அடிப்படைவாதிகளின் கூடாரமாக, தமிழகம் மாறி வருகிறதோ என்று நினைக்கும் அளவுக்கு, நாவல் எரிப்பு, கடையடைப்பு போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. பல்வேறு மிரட்டல்களால், நாமக்கல்லை விட்டு வெளியேறி உள்ள எழுத்தாளர் பெருமாள் முருகன், தமிழகத்தில் அகதியை போல் அலைந்து வருகிறார். 

அவருடன் பேசியதில் இருந்து.....

உங்களை எதிர்த்து நடக்கும் இந்த போராட்டங்களின் பின்னணியில் இருப்போர் யார்? 
துவக்கத்தில், இந்து முன்னணியின் பின்னணி இருந்தது. என்னை கைது செய்யக் கோரி, காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட நான்கு புகார்களில், இந்து முன்னணியின் புகாரும் ஒன்று. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு, நூலை தீயிலிட்டு எரித்தது. எங்களுக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்று தலைமை அறிவித்தவுடன், இந்த அமைப்புகள் வெளிப்படையாக இயங்காமல், பின்னணியில் இருந்து இயக்கி கொண்டிருக்கின்றன. இன்று வரை மிரட்டல்கள் நின்றபாடில்லை.

என்ன மாதிரியான மிரட்டல்கள் வருகின்றன?

முதலில், தொலைபேசியில் மிரட்டல் விடுத்தனர். பின், இடதுசாரி அமைப்புகள் எனக்கு ஆதரவாக போராட முன் வந்தபோது, கொஞ்சம் பின்வாங்கினர்.கூட்டங்கள் நடத்தி, எழுதிய கைகளை வெட்டுவேன், கொலை செய்வேன் என, போராட்டங்களில் மிரட்டல் விடுத்தனர். திருமாவளவன், ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன், நல்லகண்ணு, ராமகிருஷ்ணன் போன்ற தலைவர்கள் அறிக்கை விடுத்த பின், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். 


நாவலின் குறிப்பிட்ட பகுதி, மக்களிடம் எப்படி சேர்க்கப்பட்டது? நாவல் இலவசமாக வினியோகிக்கப்பட்டதா?

இந்த பிரச்னை குறித்து, தனியாக துண்டு பிரசுரங்கள் தயாரித்தனர்.அதில், நாவலின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் பிரசுரித்து, 'நம் ஊரையும், பெண்களையும், இந்து மதத்தையும் கேவலப்படுத்தி உள்ளார்' என, திட்டமிட்டு பிரசாரம் நடத்தினர். 16 பக்கங்கள் கொண்ட, 10 ஆயிரம் துண்டு பிரசுரங்களை, வீதி வீதியாக வழங்கினர்.நாவலின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் படித்தால், கேவலப்படுத்தியது போன்றே தோன்றும். இது எல்லா எழுத்தாளர்களுக்கும் பொருந்தும். இந்த வகையில், ஜாதியையும், மதத்தையும் ஒருங்கிணைத்து, திட்டமிட்டு செயல்படுகின்றனர்.

நாவலில் இருந்து ஊரின் பெயரை நீக்குவதாக அறிவித்த பின்னரும், போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறதே. இதை எப்படி எதிர் கொள்ளப் போகிறீர்கள்? 

மத்தியில், பா.ஜ.,ஆளுவதால், மதங்களை முன்னிறுத்தி இந்தப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நாவலில் இருந்து ஊர் பெயரை நீக்குவதாக விளக்கம் கொடுத்த பின்பும், போராட்டங்கள் தொடர்வதால், அவர்கள் முடிவுகளை முன்கூட்டியே தீர்மானித்து, அதன் வழியில் செல்வது போல தோன்றுகிறது. அதை தமிழக காவல்துறையும் வேடிக்கை பார்க்கிறது. ஜெயலலிதா மட்டும் முதல்வராக இருந்திருந்தால், இந்தப் பிரச்னையை வேறுவிதமாக கையாண்டிருப்பார்.

எழுத்தாளர்கள் குரல் எழுப்ப வேண்டும்! காலச்சுவடு பதிப்பக உரிமையாளர் கண்ணன் கூறியதாவது:இது, கருத்து சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கை. நாவல் வெளியாகி, நான்கு ஆண்டுகள் கழித்து, போராட்டங்கள் நடத்துவதும், எழுத்தாளனை கைது செய்ய வேண்டும் என கோருவதும், உள்நோக்கம் கொண்டவை.



நாவலுக்கு ஆதரவாக, பல்வேறு இயக்கங்கள், போராட்டம் நடத்துவதற்கு அனுமதிக்காத காவல்துறை, எதிர்தரப்பினர் நடத்தும் போரட்டங்களுக்கு தடை விதிப்பதில்லை. இதன் பின்னணியை ஆராய வேண்டும். இதற்கு எதிராக, எழுத்தாளர்கள் ஒருமித்த குரல் எழுப்ப வேண்டும். 

இன்று அமைதி பேச்சு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர், பெருமாள்முருகன்; அரசுக் கல்லூரி பேராசிரியர் மற்றும் நாவலாசிரியர். நாமக்கல், மோகனூர் சாலையில், குடும்பத்துடன் வசித்து வருகிறார். நான்காண்டுக்கு முன், அவர் எழுதிய, 'மாதொருபாகன்' என்ற நாவல், தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்செங்கோட்டைச் சேர்ந்த சிலர், மொபைல் போன் மூலம் மிரட்டல் விடுத்தனர். கடந்த 9ம் தேதி, திருச்செங்கோடு நகரில் கடையடைப்புபோராட்டம் நடந்தது. பல அமைப்பினரும், சில அரசியல் கட்சிகளும், பெருமாள்முருகனுக்கு எதிராக கருத்து தெரிவித்து, போராட்டங்களை அறிவித்து வருகின்றன. 'திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சுவாமி, தேர்த்திருவிழா, பெண்கள் ஆகியோரை கேவலமாகச் சித்தரித்து எழுதியதாக, பெருமாள் முருகனை கைது செய்ய வேண்டும். அவரது, 'மாதொருபாகன்' புத்தக விற்பனையை தடுக்க வேண்டும். விற்கப்பட்ட புத்தகங்களை திரும்ப பெற வேண்டும். பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை சிலர் முன் வைத்துள்ளனர். இந்நிலையில், '

தினமலர்' நாளிதழில், 'இந்த பிரச்னையை, சில அரசியல் கட்சிகள் கையில் எடுத்துக் கொண்டு ஆதாயம் தேடி வருவதாகவும்; மாவட்ட நிர்வாகம், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை' என, செய்தி வெளியானது. அதையடுத்து, நாமக்கல்லில் உள்ள பெருமாள்முருகன் வீட்டிற்கு, நேற்று காலை முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், இப்பிரச்னையைத் தீர்க்க, இன்று மாலை, மாவட்ட வருவாய் அலுவலர் சுப்புலட்சுமி தலைமையில், திருச்செங்கோட்டை சேர்ந்தவர்களுடன் அமைதி பேச்சு நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

நன்றி :- தினமலர், 12-01-2015

Sunday, January 11, 2015

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பெருமாள் முருகனின் மாதொருபாலன் நாவலுக்கு இந்து ஆங்கில நாளிதழில் வந்த செய்தி !


COMMENT (20)   ·   PRINT   ·   T  T  
Members of Hindu outfits burn copies of the book, ‘Madhorubagan’, in Tiruchengode on Friday.
Special Arrangement
Members of Hindu outfits burn copies of the book, ‘Madhorubagan’, in Tiruchengode on Friday.

They allege it portrays Kailasanathar temple and women devotees in bad light

Alleging that Tamil writer Perumal Murugan’s novel, Madhorubhagan, has portrayed the Kailasanathar temple in Tiruchengode and women devotees in bad light, the BJP, RSS and other Hindu outfits have demanded its ban and the arrest of the author. They burnt copies of the book on Friday at Tiruchengode.
The book has been translated and published in English as One Part Woman by Penguin India and it had seen two editions.
Mr. Murugan, an author of seven novels and a dictionary of dialects of the Kongu (western) region of Tamil Nadu, has filed a complaint with the Superintendent of Police seeking protection for him and his family members. “In the last 20 days, I have been receiving calls abusing me. It has disturbed me a lot. On Thursday, a group of people visited my house and wanted a copy of the book,” Mr. Murugan, who works as a Tamil Professor at the Government Arts College in Namakkal, told The Hindu.
Madhorubagan, Tamil equivalent of Ardhanareeswarar, the presiding deity of Tiruchengodu temple, revolves around childless couple Kali and his wife, Ponna. Their predicament is discussed in the backdrop of the “traditional free, consensual sex rituals” held once in a year during the car festival of the temple in the past. Kali resists attempts to make his wife to participate in the ritual, but in the end he is shattered when he finds her missing from home.
Kannan, publisher of Kalachuvadu, which had published the book in 2010, said though many communities were embarrassed by certain aspects of their history and culture that could not fit in with their present day middle class values, no creative writer could obey the dictums of ‘fascist forces.’ “Kalachuvadu will stand by Perumal Murugan. Tamil intellectuals must get together and face this challenge,” he said.
Bid to take out march
On Friday, more than 50 cadres, led by Tiruchengode town RSS president Mahalingam, raised slogans and tried to take out a march from the foothills of the temple to the police station. But they were stopped by Deputy Superintendent of Police Ramasamy, who asked them to prefer a complaint with the local police station. While initially their attempt to burn copies of the book was thwarted by the police, they later succeeded in doing so in front of the local police station.
In their petition, the BJP, RSS and other Hindu outfits said that in many pages the author had denigrated Lord Shiva and the women devotees who visited the temple during the car festival. The cited the narratives in pages, 87, 116, 117, 118, 129 and 172 of the book were in bad taste. They demanded the arrest of both the author and the publisher.

    B. KOLAPPAN
    S. P. SARAVANAN