கவிதைக்கு அனுபவமும் ரசனையுமே போதுமானவை.
வியாகியானமும் விமர்சனமும் அவ்வளவாய் வேண்டியதில்லை.
கவிதை என்பது மாயம்; மொழியில் கட்டப்படும் மாயம்.
கவிஞன் என்பவன் மாயக்காரன்; நல்ல கவிஞன் நல்ல மாயக்காரன். - விக்கிரமாதித்யன்
‘எனக்கும் என் தெய்வத்திற்குமிடையேயான வழக்கு’.
- சந்தியா வெளியீடு.
வாழ்வதற்கான போராட்டத்திலும் வாழ்வைக் கவிதையாக்குவதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுபவர், விக்கிரமாதித்தன்.
- வித்யா ஷங்கர்
55 -ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதை உலகில் உலா வரும் விக்கிரமாதித்யன் நவீன தமிழ்க் கவிதையில் புறக்கணிக்க முடியாத ஆளுமை. கவிதையின் பாடுபொருட்கள் பற்றிய கருத்தை ஒதுக்கிவைத்துப் பார்த்தால் இவரளவுக்கு இயபெழுச்சியுடன் எழுதுபவர்கள் குறைவு.
- சுகுமாரன்.
விக்ரமாதித்யன் கவிதைகளில் சில:
பொருள்வயின் பிரிவு
அன்றைக்கு
அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை
ந்சப்தம் காடாக விரிந்து கிடந்தது
சாரல் மழைபெய்து
சுகமான குளிர் வியாபித்திருந்தது
அயர்ந்து
தூங்கிக் கொண்டிருந்தான் பெரியவன்
அரவம் கேட்டு விழித்த சின்னவன்
சிரித்து விளையாடிக்கொண்டிருந்தது
சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள்
இவள்
வெந்நீர் வைத்துக் கொடுத்தாள்
வெளுத்த துணிகளை எடுத்து வைத்தாள்
வாசப்வரை வந்து
வழியனுப்பி வைத்தாள் தாய்போல
முதல் பேருந்து
ஓட்டுநர் இருக்கைக்கு பின்புறம் ஜன்னலோரம்
பிழைப்புக்காக
பிரிந்து வந்துகொண்டிருந்தேன்
மனசு கிடந்து அடித்துக்கொள்ள.
***
நெஞ்சு படபடக்கிறது
நீர் வீழ்ச்சியென்று
அருவியை
யாராவது சொல்லிவிட்டால்.
***
பெரிய
வித்தியாசமொன்றுமில்லை அடிப்படையில்,
தீப்பெட்டி படம்
சேகரித்துக்கொண்டிருக்கிறான் என்மகன்
கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன் நான்.
***
இருந்நூறு வார்த்தைகளி
வாழ்க்கை நடத்திவிடலாம்
இவனோ
வார்த்தைகளின் உர்வலத்தில்
வழி தவறிய குழந்தை.
மாமிசம் தின்னாமல்
சுருட்டுப் பிடிக்காமல்
பட்டையடிக்காமல்
படையல் கேட்காமல்
உக்ரம் கொண்டு
சன்னதம் வந்தாடும்
துடியான கருப்பசாமி
இடையில் நெடுங்காலம்
கொடைவராதது பொறாமல்
பதின்னெட்டாம்படி விட்டிறங்கி
ஊர் ஊராகச் சுற்றியலைந்து
மனிதரும் வாழ்க்கையும்
உலகமும் கண்டுதேறி
அமைதி கவிய
திரும்பி வந்தமரும்
கடந்தகாலக் கைத்தநினைவுகளை வருத்தவும்
எதிர்கால நிச்சயமின்மை உறுத்தவும்.
***
முந்தாவிட்டால் ஒன்றும்
மோசமில்லை
பிந்திவிட்டாலோ
பெரும்பாதகம் வந்துவிடும்.
***
பறவைகள்
பறக்கும் ஆகாயத்தில்
புழுக்கள்
வளரும் பூமியில்
மானுடம் மட்டும்
யங்கும் இடம் தெரியாமல்.
****
அவர்கள்
பேசுவது பகவத்கீதை
பின்னால் இருக்கிறது
பாதுகாப்பான வாழ்க்கை.
***
பக்கத்தில் இருக்கும்போது
பாவம் பார்க்கக்கூட இல்லை
விலகிப்போன பிறகோ
விசாரித்துக்கொண்டிருக்கிறார்களாம்.
***
வேலைக்குப் போவாள் பெற்றவள்
வீட்டில் இருக்கும் கைக்குழந்தை
கட்டிய தாய்ப்பாலை
சுவரில் பீய்ச்சிச் சிந்தவிடும் விதி.
நன்றி :-
கவிதையின் கால்தடங்கள்
50 கவிஞர்கள் - 400 கவிதைகள்
தேர்வும் தொகுப்பும்
செல்வராஜ் ஜெகதீசன்
1990 ஆம் ஆண்டு முதல் வாசிப்புத்
அந்தரங்கம்/ அகரம் ( 2008 ), இன்னபிறவும் / அகரம் (2009 ),
ஞாபங்கள் இல்லாதுபோகுமொருநாளில் / அகநாழிகை (2010 ),
மற்றும் நான்காவது சிங்கம் / காலச்சுவடு (2012 )
ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.
ஐந்தாவது கவிதைத் தொகுப்பு ‘சிவப்பு, பச்சை
மஞ்சள் வெள்ளை’ உயிர்மை வெளியீடு ( 2014 )
சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.
பணிபுரிவது ஐக்கிய அரபுக் குடியரசு அபுதாபியில்.
மஞ்சள் வெள்ளை’ உயிர்மை வெளியீடு ( 2014 )
சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.
பணிபுரிவது ஐக்கிய அரபுக் குடியரசு அபுதாபியில்.
அகநாழிகை பதிப்பகம், 33- மண்டபம் தெரு,
மதுராந்தகம்-603 306. பேச: 9994541010
No comments:
Post a Comment