கொம்பன்’ படப்பிடிப்பின் போது எனக்கு அறிமுகமான எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி. அவரது ‘குற்றப் பரம்பரை’ நாவலைக் கையொப்பமிட்டுக் கொடுத்தார். கொம்பூதி என்ற கிராமத்தில் நடக்கும் கதைக்களம் அது. புத்தகத்தைப் படிக்கத் தொடங்கும்போதும் ஒரு திரைப்படம் பார்க்கிற உணர்வோடுதான் நம்மை அது இழுத்துக்கொள்ளும். பொதுவாக, கதைகளில் விரியும் விஷுவல் உணர்வுகள் ஒரு ஒளிப்பதிவாளருக்கு மிகவும் முக்கியம். இயக்குநர் கதை சொல்லச் சொல்ல... ஒளிப்பதிவாளரின் மனம் ஒரு கதைக்களத்தை உருவாக்கிக்கொண்டே இருக்கும்.
அப்படி இந்த நாவலில், ‘வேட்டை நாய்கள் முன்னே இழுத்துப்போக, சிறு பையன்கள் கூட்டத்துக்கு முன்னே ஓடினார்கள். றெக்கை சடசடக்கும் கோழி, சேவல்கள்’ என்று வார்த்தைகள் விரிந்து ஓடும். இப்படிப் புத்தகத்தின் இரண்டு வரிகள் கடந்து செல்லும்போதே இனம்புரியாத கற்பனையையும் ஒருவிதக் காலநிலையையும் அது ஏற்படுத்தும்.
அதேபோல, சமீபத்தில் ‘தி இந்து’ நாளிதழில் வேல. ராமமூர்த்தி எழுதிய ‘குருதி ஆட்டம்’ தொடரையும் விடாமல் படித்தேன். அதைப் புத்தக வடிவில் படிப்பதற்காகவும் காத்துக்கொண்டிருக்கிறேன்.
- ம. மோகன்
No comments:
Post a Comment