பாரதியின் பெயரைத் தாங்கிய இந்த இதழில் பாரதியார் கவிதைகள் சிலவும் வெளிவந்திருக்கின்றன. ஏற்கெனவே அறியப்பட்ட சில கவிதைகளும் வெளி வந்திருக்கின்றன. "வெளிவராதது' என்னும் குறிப்புடன் "காலனுக்குரைத்தல்', "கவிதாதேவி' ஆகிய கவிதைகள் கண்டெடுத்து வெளியிடப்பட்டிருக்கின்றன.
இந்த இதழ்களின் மற்றுமொரு சிறப்பு, ஏராளமான மொழிபெயர்ப்புக் கவிதைகளை இந்த இதழ் வெளியிட்டமை ஆகும். தமிழில் மொழிபெயர்ப்பு இலக்கியம் குறித்த வரலாற்றிலும் இந்த முயற்சி சிறப்பாகப் பதிவு செய்யப்பட வேண்டியதாகும். மொழிபெயர்ப்பு இலக்கியத்திற்கு இந்த இதழ் ஆற்றிய பங்களிப்பு உரிய முறையில் இதுவரை போற்றப்படவில்லை. ஷெல்லிலி, புளோரியான், உமர்கய்யாம், சுல்லிலி ப்ருய்தோம், கீட்ஸ், விக்டர் யூகோ, லாஷம்போதி, லாங்ஃபெலோ, சிப்பர், பிரிசோ, மாக்கே, ஷேக்ஸ்பியர், ஆந்தரே ஷெனியே, ரோன்சார் முதலிலிய ஆங்கில, ப்ரெஞ்சுக் கவிஞர்களின் கவிதைகள் இந்த இதழில் பலரால் மொழிபெயர்க்கப்பட்டு தொடர்ந்து வெளிவந்திருக்கின்றன. மொத்தம் 24 மொழிபெயர்ப்புக் கவிதைகள் இந்த இதழ்களில் வெளிவந்திருக்கின்றன.
"ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதாமண்டலத்தின்' முதல் இதழில் சுதந்தரம்- சமத்துவம்- சகோதரத்வம் என்னும் குறிப்போடு ப்ரெஞ்சுக் குடியரசுத் தலைவர் முசியே லெப்ரான் அவர்களின் படம் ஒருபக்க அளவில் இடம்பெற்றிருந்தது. இரண்டாம் இதழில் பிரெஞ்சிந்தியாவின் கவர்னர் ஜெனரலான முசியே சொலோமியாக் அவர்களின் படம் அதே குறிப்போடு ஒரு பக்க அளவில் இடம்பெற்றிருந்தது.
சமகாலத்தில் வெளிவந்த பாரதியாருடைய நூல்கள் குறித்த அறிவிப்பு விளம்பரங்களும், இதழ்கள் குறித்த விளம்பரங்களும், பிற நூல்கள் குறித்த விளம்பரங்களும் இதழ்தோறும் இடம்பெற்றிருந்தன. பாரதியாருடைய "கட்டுரைகள் தத்துவம் 1' உள்ளிட்ட பாரதியின் பதினெட்டு நூல்கள் கவிதாமண்டல அலுவலகத்தில் கிடைக்கும் என்னும் அறிவிப்பானது ஏறத்தாழ ஒருபக்க அளவில் கவிதாமண்டலத்தில் இடம்பெற்றது. கவிதாமண்டலம் இதழின் சந்தாதாரராய்ச் சேருவோருக்கு "ருஷியப் புரட்சி முதல் பாகம்' என்னும் நூல் இலவசமாக வழங்கப்படும் என்னும் அறிவிப்பும் ஓர் இதழில் வெளிவந்தது.
"நகரதூதன்', "விடுதலை', "குடியரசு', "தமிழன்', "வம்பன்', "வித்தகம்', "ஈழகேசரி', "புது உலகம்', "விதூஷகன்', "சிறுவர் அறிவுக்கதிர்', "இந்தியத்தாய்', "திராவிட' "கேசரி', "ஞானபோதினி', "பகுத்தறிவு'
முதலிலிய இதழ்கள் குறித்த அறிவிப்புகளும் இதழ்களில் இடம்பெற்றிருந்தன. எம்.எஸ். சுப்புலட்சுமியின் இசைத்தட்டு முதலிலிய விளம்பரங்களும், விளாத்திகுளம் சாமிகள் பாடிய பாரதி பாடல் இசைத்தட்டுகள் குறித்த விளம்பரமும் இதழ்களில் வெளிவந்திருந்தன. ஒரு கிராமபோன் இசைத்தட்டு விளம்பரமானது மிக முக்கியமான ஒரு குறிப்பை நமக்கு வழங்கும்வண்ணம் வெளியாகி இருக்கின்றது. "தேசிங்குராஜன்' என்னும் பாரதிதாசன் இயற்றிய சரித்திர இசைத்தட்டு விளம்பரமாகும் இது. பாரதிதாசன் இவ்வகையில் ஆற்றிய ஒரு படைப்பைப் பற்றிய குறிப்பாக அது அமைவதோடு 1935-ஆம் ஆண்டு வாக்கில் புகழ்பெற்ற அட்கின்ஸ் கம்பெனியாருடைய இசைத்தட்டுகளில் பாரதிதாசனின் படைப்புகள் வெளிவந்திருப்பதையும் உணர்த்துகின்ற குறிப்பாகவும் அமைகின்றது.
பாரதியின் பெயரால், பாரதியின் புகழ்பாடிய வண்ணம் வெளிவந்த இந்தக் கவிதை இதழானது சமகாலச் சுயமரியாதை இயக்க உலகில், திராவிட இயக்க உலகில் எவ்வாறு மதிக்கப்பட்டது என்பதை தந்தை பெரியாருடைய "குடிஅரசு' இதழில் வெளிவந்த மதிப்புரையானது நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றது. அந்த மதிப்புரையின் ஒரு பகுதியை இங்கே காணலாம்.
"காலஞ்சென்ற தேசீயகவி, சுப்பிரமணிய பாரதியார் அவர்களிடம் நேரில் பழகியவரும், இன்று தமிழ்நாட்டில் எளிமையும், இனிமையும், பொருட்செறிவும் வாய்ந்த அழகிய கவிதைகள் இயற்றிவருபவரும் ஆகிய நமது தோழர் பாரதிதாசன் அவர்களைப் பற்றி நாம் நேயர்களுக்கு அதிகமாக எடுத்துக்கூற வேண்டியதில்லை...
தமிழர் உள்ளத்திலும், சமூகத்திலும் புதிய எழுச்சியையும், கவிதா சக்தியையும் எழுப்பும் நோக்கத்துடனும் இவரை ஆசிரியராகக் கொண்ட "ஸ்ரீ சுப்பிரமண்யபாரதி கவிதாமண்டலம்' என்னும் பெயருடன் ஒரு மாத வெளியீடு புதுச்சேரியில் இருந்து வெளிவருகின்றது. இதில் முழுவதும் கவிதைகளே மிளிர்கின்றன...
இதில் வேடிக்கை, கதை, இயற்கை மாண்பு, நீதி முதலிலியன பற்றிய எல்லா விஷயங்களும் பாடல்களிலேயே அமைந்துள்ளன. இடையிடையே பாடல்களுக்கு ஏற்ற படங்களும் அமைந்திருக்கின்றன. இது தமிழ் முன்னேற்றத்திலும், தமிழர் முன்னேற்றத்திலும் ஆர்வமுடைய ஒவ்வொருவரும் கட்டாயம் வாங்கிப் படிக்கவேண்டிய பத்திரிகை என்பதை வற்புறுத்திக் கூறுகிறோம்.
பத்திரிகை டிம்மி 1-க்கு 4 சயிசில், நல்ல வழுவழுப்பான கிளேஸ் கடிதத்தில் ஆர்ட் பேப்பராலான அட்டையுடன் அழகாக அச்சிடப் பட்டிருக்கிறது. இதன் விலை தனிப்பிரதி அணா 0-4-0.'
இவ்வாறெல்லாம் சமகால சமூகத்தால் மதிக்கப்பட்ட இந்த இதழின் வரலாறு சில காலத்துக்குள் என்ன ஆனது தெரியுமா?
கவிதாமண்டலத்தின் இரண்டாவது இதழ் வெளிவந்தபோது, முதல் இதழைப் பார்த்த மகிழ்ச்சியில் சுவாமி சுத்தானந்த பாரதியார் "கண்டேன் கண்டேன் கவிதா மண்டலம், கொண்டேன் கொண்டேன் கொள்ளொணா மகிழ்ச்சி!' என்று பரவச நிலையில் ஒரு கவிதை எழுதியிருந்தார். அந்த மகிழ்ச்சி அதிககாலம் நீடிக்கவில்லை. ஆறே ஆறு இதழ்களோடு "ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதாமண்டலம்' இதழின் வாழ்க்கை முடிந்து போனது. வல்லிலிக் கண்ணன் பாராட்டி எழுதிய சோதனையும் சாதனையும் கூடிய இதழ்முயற்சி வேதனையோடு விடைபெற்றுக் கொண்டது. ஆம்; "கவிதாமண்டலத்தின்' ஆறாவது இதழ் மாதமும் ஆண்டும் குறிப்பிடப்படாமலேயே தாமதமாக வெளிவந்தது. வழக்கம்போலவே இதழில் கவிதைகள் ஏராளமாக இடம்பெற்றன. மொழிபெயர்ப்புக் கவிதைகளும் இடம்பெற்றன. அழகிய ஓவியங்களும் இடம்பெற்றன. ஆனால் அந்த ஆறாவது இதழின் முகப்பானது பாரதியின் படத் தைத் தாங்கி வெளிவரவில்லை.
மாறாக பாரதி எழுதிய "நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ' எனத் தொடங்கும் கவிதையின் இரு பாடல்களைத் தாங்கி வெளிவந்தது. இதழுட்பகுதியின் முதலில் இதழ் மேலாளர் பெயரால் ஓர் அறிவிப்பு இடம்பெற்றிருந்தது. "நமது விஞ்ஞாபனம்' என்னும் தலைப்பில் அமைந்த அந்த அறிவிப்பு இதழ் சந்தித்த ஒரு நெருக்கடியை கவிதாமண்டலம் நேயர்களுக்கு வெளிப்படுத்தியது. அந்த அறிவிப்பை இங்கே காணலாம்:
"தமிழ்நாடு, சிங்கப்பூர், தென்னாப்ரிக்கா, கோலாலம்பூர் முதலிலியவிடங்களிலிருந்து அநேக தோழர்கள் கவிதாமண்டலத்தின் தாமதத்திற்குக் காரணம் கேட்டிருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் விடை எழுதுவதாய் இருந்தால் அதற்கென தனிப்புத்தகம் அடிக்க வேண்டியிருக்கும். சுருங்கச் சொல்லிலின் பிரிட்டிஷ் போஸ்டல் ரிஜிஸ்ட்ரேஷன் என்ற பெரிய பூகம்பம் நமது மண்டலத்திற்கு உண்டாகி, அதனால் ஏற்பட்ட அதிர்ச்சிக்குஅளவில்லை என்றுதான் ஒரேவரியில் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. மேற்சொன்ன அதிர்ச்சியினால் சிதைந்துபோன நமது பாதைகளை சீர்படுத்தும் நிர்மாண வேலையில் காரியாலயத்தார் ஈடுபட்டிருந்தமையால் நமது கவிதாமண்டலம் இவ்வளவு தாமதமாக வெளிவர நேருகின்றது. (புத்தகம் 1, வெளியீடு 7)'.
இந்த அறிவிப்பால் ஆறாவது இதழுக்கு முன்பே இதழ் தாமதத்தோடு வரநேர்ந்தது என்பதை அறியமுடிகின்றது. அதே நேரத்தில் தமிழின் முதல் கவிதை இதழான இந்த இதழை வாசிப்பவர்கள் உலகெங்கும் இருந்திருக்கிறார்கள் என்கிற உண்மையையும் அறியமுடிகின்றது. ஆம்; தமிழகம், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, கோலாலம்பூர் முதலிலிய இடங்களிலிலி ருந்தெல்லாம் கவிதாமண்டலத்தின் தாமதத்திற்கு அன்பர்கள் காரணம் கேட்டிருப்பதாகவும், அதற்கான சுருக்கமான பதில் என்றும் இந்த அறிவிப்பு அமைந்திருக்கின்றது. ஆங்கிலேய அரசாங்கத்தின் அஞ்சற் பதிவு கிட்டாமையே முதன்மையான காரணமாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனை கவிதா மண்டலத்திற்கு ஏற்பட்ட பெரிய பூகம்பம் என்றும், அந்த பூகம்பத்தால் ஏற்பட்ட அதிர்ச்சிக்கு அளவில்லை என்றும், அதிர்ச்சியால் சிதைந்துபோன பாதையைச் சீர்படுத்தும் பணியில் இதழ்நிருவாகத்தார் ஈடுபட்டிருப்பதையும், அதனால், இந்த ஆறாவது இதழ் மிகுந்த தாமதத்தோடு வருவதாகவும் இந்த அறிவிப்பு விளக்கம் தந்திருக்கின்றது. இந்தக் குறிப்பானது "கவிதா மண்டலம்' இதழ் சந்தித்த ஒரு பெரிய நெருக்கடியை, இதழைத் தொடர்ந்து நடத்துவதில் ஏற்பட்டிருக்கிற இடர்ப்பாட்டை வெளிப்படையாக அறிவித்திருக்கின்றது. இந்த அறிவிப்பு வெளிவந்த ஆறாவது இதழுக்குப்பின் "ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டல'த்தின் இதழ்கள் எதுவும் வரவேயில்லை.
ஒருபுறம் ஆங்கிலேய ஆட்சியின் வாயிலாக ஏற்பட்ட தடை; இன்னொரு புறம் தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் இந்த இதழை உரிய முறையில் வரவேற்றுப் போற்றாத நிலை. இந்த இரண்டு காரணங்களும் இந்த அரிய இதழைத் தொடர்ந்து நடைபெறவிடாமல் செய்துவிட்டன. தமிழ் மக்கள் இவ்விதழுக்கு உரிய ஆதரவை அளிக்கவில்லை என்பதை அக்காலத்தில் உடனிருந்த புதுவை ச. சிவப்பிரகாசம் தனது முதுமையில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்: இதனால் நிறைய பொருட்செலவும் ஆனது. எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லை. எனவே, 7 இதழ்களோடு 6 இதழ்கள் "கவிதாமண்டலம்' நின்று போயிற்று. (பாவேந்தரும் புதுவைச் சிவமும்- சில நினைவுகள், பக்.47, 48).
ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம் என்னும் பாரதியின் எண்ணம்- தமிழில் கவிதைக்கென்று தனியே பத்திரிகை நடத்தவேண்டும் என்கின்ற பாரதிதாசனின் கனவு குறுகிய காலத்திலேயே கலைந்துபோய்விட்டது. கவிதா மண்டலம் என்கிற நல்லதோர் வீணையின் நாதம் குறுகிய காலத்திலேயே அடங்கிப் போய்விட்டது. ஆங்கிலேய அரசாங்கத்தின் அங்கீகாரமின்மை, இதழுக்கு ஆதரவு காட்டாத தமிழர்களின் அலட்சிய மனோபாவம் என்னும் புழுதியில் கவிதா மண்டலம் என்னும் அந்த அற்புதமான வீணை வீசியெறியப்பட்டுவிட்டது. காலத்தின் நீண்ட மௌனத்தில் அரைநூற்றாண்டு கால அளவிற்கு அந்த வீணையின் நாதம் ஒலிலிக்காமலேயே போனதுமட்டுமல்ல; அப்படி ஒரு வீணை இருந்த சுவடே தெரியாமலும் போய்விட்டது. அரைநூற்றாண்டுக்குப் பின்னர் இதழ் தொடங்கப்பட்டபோது துணையாக இருந்த இளைஞர்களுள் ஒருவரான எஸ்.ஆர். சுப்பிரமணியம் தமது முதுமையில் முதுபெரும் சருவோதயத் தலைவராக வாழ்ந்த காலத்தில் அந்த இதழை மீண்டும் 1980-களில் கொண்டுவந்தார். அந்தப் பழைய நினைவுகளை தமிழ்ச்சமூகத்தில் மீண்டும் நினைவுகூர வழிசெய்தார். அந்த முயற்சி யும் ஒரு கட்டத்தில் நின்று போய்விட்டது. காலவோட்டத்தில் தமிழில் கவிதைக்கென்றே "கவிதை' முதலிலிய ஒருசில இதழ்கள் வெளிவரத் தொடங்கின. தமிழில் இரண்டாயிரம் ஆண்டுக்கால கவிதைவளம் இருக்கின்றபோதிலும், இணையற்ற இருபதாம் நூற்றாண்டுக் கவிதைவளம் இருக்கின்ற போதிலும் கவிதைக்கென்றே தொடங்கப்பட்ட இதழ் முயற்சிகள்தாம் வளம்பெறவில்லை.
"கவிதா மண்டலம்' இதழ் நிலைபெறாமல் போயிருக்கலாம். ஆனால், அதன் இடம், அதன் கொடை தமிழ்க்கவிதை வரலாற்றிலும், தமிழ் இதழியல் வரலாற்றிலும் நிலைப் பேறு மிக்கது. தமிழ் இலக்கிய உலகம் அந்த நிலைப்பேற்றை நினைவுகூர வேண்டும்; கொண்டாட வேண்டும்; அந்த வழியில் புதிய முயற்சிகளுக்கு இடம் தரவேண்டும்.

நன்றி :-http://www.nakkheeran.in/Users/frmArticles.aspx?A=14419
No comments:
Post a Comment