Monday, November 16, 2015

போலி மருத்துவராக அவதாரம் எடுத்த “ நிக்காலோ மானுச்சி”


இவர்  இத்தாலியின்  பிடபல  நகரமான  வெனீஸில்  1639இல்  பிறந்தவர். 14வயதிக்  வீட்டை  விட்டு வெளியேறியவர்.  ஊர்  உலகெல்லாம்  சுர்றிவிட்டு  இந்தியா  வந்து  சேர்ந்தார்.  அவருக்கு  எந்த  வேலையும்  தெரியாது.  எனவே  போலி  மருத்துவராகிவிட்டார்.  ஆம்!  அந்தக்  காலத்தில்  ஐரோப்பாவிலிருந்து  வந்த  பலர்  மருத்துவர்களாக  இருந்ததால்,  ஐரோப்பியர்கள்  எல்லோருக்கும்  மருத்துவம்  தெரியும்  என்று  நம்மூர்  மக்கள்  நம்பினார்கள்.  விளைவு  போலி  மருத்துவராக  அவதாரம்  எடுத்தார்  மானுச்சி.  ஆனால்,   தன்  ஆர்வத்தாலும்,  அயரா  உழைப்பாலும்  மருத்துவத்தை  வேகமாகக்  கற்றுக்  கொண்டார்.  ஆனால்  அவர்  மருத்தும்  கற்ருக்க்  ல்ப்ள்ள  எத்தனை  பேரைக்  காவு  கொடுத்தாரோ  தெரியவில்லை.  எப்படியோ  1670  முதல்  1678  வரை  லாகூரில்  சிறந்த  மருத்துவர்  என்று  பெயரெடுத்துவிட்டார். 

 (  இப்போதும்  ஆங்காங்கே  போலி  மருத்துவர்கள்  கண்டறியப்பட்டு  கைது  செய்யப்பட்டு  வருதல்  நாம்  கண்கூடாகக்காணும்  உண்மை.  ) 
ஐரோப்பிய  மருத்தும்  மட்டுமன்றி  முகாலயபாணி  மருத்துவத்தையும்  சேர்த்துப்பார்த்ததே  அதற்கு  முக்கிய  காரணமாக  இருக்கக்கூடும். 


நிக்காலோ  மானுச்சி  பின்னர்  எலிசபெத்  கிளார்க்  என்ற  விதவையைத்  திருமணம்  செய்து கொண்டார்.  அப்பென்ணின் பெரிய  தோட்டத்து  வீட்டில்  செட்டில்  ஆகியும்  விட்டார்.  மருத்துவத்  தொழிலும்  தொடர்கதையானது.  மெட்ராஸ்  மக்களும்  அவரைச்  சிறந்த  வைத்தியராக  ஏற்றுக்கொண்டனர்.  காய்ச்சலைக்  குணப்படுத்த  பாதரசக்  கலவையால்  ஆன  ஒரு  கல்லைப்  ப்யன்படுத்தினார்.  அந்தக்கல்லை  மக்கள்  மானுச்சி  கல்  என்றே  அழைத்தார்கள்.

இந்த  மானுச்சிதான் ,  பின்னாளில்  புகழ்பெற்ற  Storia  Do  Mogar  (  முகலாயர்களின்  சரித்திரம் )  என்ற  நூல்லை  எழுதியவர். இந்நூல்  ஐந்து  தொகுதிகளைக்  கொண்டது. அன்றைய  மொகலாய  ஆட்சியைப்பற்றி  அறிந்துகொள்ள  உதவும்  நூல்.

தகவல்  உதவி

 சென்னை  தலைநகரின்  கதை 

  ஆசிரியர்  பார்த்திபன்

நூல்  வெளியீடு

சிக்ஸ்த் சென்ஸ்  பப்ளிகேஷன்ஸ்.
 சென்னை -600 017.
கைப்பேசி :- 7200050073  
128  பக்கங்கள்  
ரூ80/-   
ஜனவரி 2014.   


No comments:

Post a Comment