Tuesday, November 3, 2015

புதுக்கோட்டை பதிவர் சங்கமத்தில் 2015 -வெளியிடப்பட்ட ஈழத்துப் படைப்பாளி ரூபனின் ஜன்னல் ஓரத்து நிலா -விலிருந்து.



கவிஞர்  ரூபன்  திரிகோணமலை  ஈச்சிலம்பற்றைச்  சார்ந்தவர்.  ஈச்சிலம்பற்றை  பெரும்பாலும்  தமிழர்கள்  அதிகம்  வாழும் பகுதி.  தபிராசா - தவரூபன்  என்பது  இவர் பெயராக  இருந்தாலும்.  வலைதளத்தைப்  பொறுத்தவரை  ரூபன் என்றே  அறியப்படுகின்றார். தி.மு.ஸ்ரீ சண்பக மகாவித்தியாலயத்திலேயே  இவர்  கல்வி ப்யின்றார். தி.மு.மாவடிச்சேனை வித்தியாலத்தில்  சிலகாலம்  ஆசிரியராகப்  பணியாற்றினார்.

2006-ஆம்  ஆண்டு யுத்த  நடவடிக்கைகளின் எதிர்விளைவாக  தாய், மனைவி, குழந்தைகள்,  தாயகம்  நீங்கினார். மட்டக்கிளப்பில்  அகதியாக  இரண்டு  ஆண்டுகள் வாழ்ந்தார்.  திரைகடலோடித்  திரவியம்  தேடிடக்  கடல்  கடந்தார்.  சிறுவயதிலிருந்தே  தமிழ்ப்பற்று  அதிகம் கொண்டவராகத்  திகழ்ந்தார். பல்வேறு  பத்திரிக்கைகளிலும்  இவரது  படைப்புக்கள்  வெளிவந்துகொண்டிருக்கின்றன.

தமிழ் நாட்டில்  வழக்கம்போல்  இந்த  ஆண்டும்  வலைப்பதிவர்  சங்கமித்தனர்.  இவ்விழா  5  -ஆம்  ஆண்டு. இது பலவகையில்  சிறப்புப்  பெற்றது.  முதலாவதாக,  உலகத்  தமிழ்  வலைப்பதிவர்  கையேடு  வெளியிடப்பட்டது.  இரண்டாவது  சிறப்பு, ஈழத்தில்  பிறந்து வளர்ந்து, மலேசிய மண்ணில்  வாழ்க்கை  நடத்தி வருகின்றார்.  

அவர் எழுதிய  ”ஜன்னல் ஓரத்து நிலா” கவிதை நூல். உணர்ச்சியுடன்  படித்தால்தான்  கவிதைகளின்  மூலம் கிளிசரின் இன்றியே  கண்ணீர்  வரும் என்று முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதை  மறுக்கின்றேன். உணர்ச்சி  என்று ஒன்று இருந்தால்தான்  எழுத்தே  வரும். இலக்கணப்படி  ஜன்னல்  யன்னல்  என்று நிரூபணம் செய்கின்றார்  முன்னுரையாளர்.  எனக்கு இலக்கணம்  எல்லாம் தெரியாது. ஆனால், ஜன்னல் என்பதற்கு  காலதர்  ( கால்- காற்று;  அதர் - செல்லும் வழி ) என்று சிலப்பதிகாரத்தில் ஒரு சொல் உண்டு என்று  இளமைக்காலத்தில்  ஒரு பேருரையில்  கேட்டது  நன்றாக  நினவில் இருக்கின்றது.  அமரர்  தி.க.சி. வழியில்  பாராட்டிவிட்டுச்  செல்வதே  என்  வழி.

கழிவறைக்  குழந்தை

தாயே..தாயே...தாயே..
நீ   செய்த  தப்புக்காக..
நீ  எனக்குக்  கொடுத்த  தண்டனையா ?
இல்லை  சமுதாயத்தின்  விழிக்காக
சமுதாயம்  கொடுத்த  தண்டனையா ?
இப்படி  வருமென்று  அறிந்திருந்தால்
இப்படி  ஏன்  என்னைப்  பெற்றெடுத்து
கழிவறையில்  போட்டு  விட்டாய்..?


அம்மா..அம்மா..அம்மா..என்று
நான்  அழுகிறேன்  - இது
என்னைப்  பெற்ற  தாயுள்ளம்
பதறவில்லையா..?

உன்  மார்பில்  சுரக்கும்
பாலைக்  கேட்க  மாட்டேன்...
உன்  மடியில்  படுத்துறங்க
இடம்  கேட்க  மாட்டேன்...


நீ  என்னை  மடியில்  ஏந்தி
கொஞ்சி  அரவணைத்து  முத்தமிட
வேண்டாம்...
உன்  அன்பு  வார்த்தைகளால்
தாலாட்டு  பாட்டும்  வேண்டாம்..

தாயே...தாயே...  தாயே
என்னைப்  பெற்றெடுத்த  நீ
ஒரு  அனாதையின்   வாசற்படியில்
போட்டிருந்தால்  - நான்
உயிர்  பிழைத்திருப்பேன்  -  ஆனால்
நீ  உன்  பிள்ளையின்  பிஞ்சு  உள்ளம்
கதறக்  கதற...  கழிவறையில்  போட்டாயே
தாயே...

உன்  மனசு  என்ன  கல்  மனசா...?
ஆழத்தில்  கல்லை  உடைத்தால்
எப்படியாவது 
நீர்  கசியும்  - ஆனால்
உன்மனதில்  சிறிதளவு  நீர்
கூட  வடியவில்லையம்மா.....
ஒரு  அனாதையின்  வாசற்  படியில்
போட்டிருந்தால்  -  நான்
உயிர்  பிழைத்திருப்ப்பேன்...

நீதான்  என்  தாயென்று
ஊர்  அறிய  சொல்லியிருக்க  மாட்டேன்..
அப்படிச்   சொல்லியிருந்தால் - 
எனக்குத்தான்  தலைகுனிவு....
அனாதை  என்ற  பெயரே  -  எனக்கு
சாவும்  வரை  மன  நிறைவைத்
தந்திருக்கும்  தாயே..தாயே...தாயே...


வெளியீடு”
இனிய நந்தனம் பதிப்பகம்
17 , பாய்க்காரத்  தெரு
உறையூர், திருச்சி - 620 003
---------------------------------------
94432 84823
--------------------------------------
nandavanam10@gmail.com
--------------------------------------------
நன்றி :  நா.முத்துநிலவன், ஒருங்கிணப்பாளர், விழாக்குழு
மற்ரும் கணினித் தமிழ்ச்  சங்கம்
புதுக்கோட்டை / 94431 93293
-------------------------------------------
muthunilavanpdk@gmail.com
-----------------------------------
http:/valarumkavithai.blogspot.com







  

2 comments:

  1. வணக்கம்
    ஐயா

    தங்களின் பார்வையில் விமர்சனத்தை மிக அழகாக சொல்லியுள்ளீர்கள்
    வாழ்த்துக்கள் ஐயா...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. உங்கள் படைப்பை ஒருவர் எடுத்துப் போட்டுப் பாராட்டினால் அதற்கு நன்றிதான் சொல்லவேண்டும் ரூபன்! வாழ்த்துதல் இங்குச் சரியாக இருக்காது என்பது என் கருத்து. என்ன கவிஞரே சரியா?

    ReplyDelete