பேச்சாற்றல் எழுத்தாற்றல் பேச்சை விட்டுப்
பிறழாத செயலாற்றல் எதிர்ப்பைத் தாங்கும்
மூச்சாற்றல் முகத்தாற்றல் பிரச்சனைக்கு
முடிவெடுக்கும் பேராற்றல் நேர்மைவாளின்
வீச்சாற்றல் விரைவாற்றல் இருட்டறைக்கு
விளக்கேற்றும் மனத்தாற்றல் தப்பை ஏசும்
ஏச்சாற்றல் இவ்வாற்றல் எல்லாம் கொண்டே
இவ்வையத் தலைமைகொள் எழுவாய் தோழா!
எளிமைமிகப் பொறுமைசிறு பொறாமை இன்மை
இறுதிவரை உறுதிநிறை மனம். குழம்பா
தெளிவுமதி நடுவுநிலை பொதுநலத்தில்
திளைக்குமகம் தொண்டரினை வழி நடத்தும்
ஒளிமகுடம் ஒருகொள்கை உயர்ந்த எண்ணம்
உழைப்பார்வம் அயராத முயற்சி யாவும்
களித்தபடி கைக்கொண்டுக் காசினிக்கு
கவித்துவமாய் இசைமயமாய்த் தலைமை கொள்வாய்!
சிங்கத்தின் வாலாதல் அதனினும் நீ
சிற்றெலியின் தலையாதல் சிறப்பாம். இந்த
அங்கங்கள் யாவினிலும் தலையே மேலாம்.
அஃதொப்ப எத்துறைக்கும் தலைமை மேலாம்.
எங்கும் நீ இளந்தோழா தலைமை கொள்வாய்.
என்றாலும் தலைவனாகும் அதற்கு முன்னால்
இங்கே நீ தொண்டனாக முதலில் கற்பாய்
இதற்குப்பின் இவ்வையத் தலைமை ஏற்பாய்!.
உச்சம் அடம் ஞானம் உயிர்ப்பு ( November 1997 )
ஆசிரியர்
அண்ணாகண்ணன்
கிடைகுமிடம்
ஆசிரியர்
அண்ணாகண்ணன்
கிடைகுமிடம்
9841120975
annakannan@gmail.com
annaakannan birthday greetings
November
நிறுவனர்
நிறுவனர்
இணைய இதழ்
No comments:
Post a Comment