இன்றையச் சூழலில் பெரியோர் முதல் சிறியோர் வரை கூகிள் தேடுபொறி மூலம் பல்வேறு பயனுள்ள தகவல்களைத் தேடிப் பெறுகிறோம். சில சமயங்களில் தவறுதலாத் தட்டச்சு செய்து விட்டாலோ அல்லது தெடும் வார்த்தைக்குத் தொடர்பில்லாமலோ ஆபாசத் தகவல்கள் வந்துவிடுகின்றன. இதைத் தடுப்பதற்கு கூகிள் SAFE SEARCH LOCK என்ற வசதியை 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது. SAFE SEARCH -ஐ ஆன் செய்வதன் மூலம் ஆபாசத்தளங்கள், படங்கள் மற்று வீடியோக்கள் கூகிள் தேடல் முடிவில் வராமல் தடுக்க முடியும். இதனால் வீட்டில் உள்ள குழந்தைகள், மாணாக்கர்கள் கூகுளைப் பாதுகாப்புடன் பயன்படுத்தலாம்.
எங்கள் இணையதளம் tamilspeak.com நேரடியாகக் களமிறங்கியது. கூகிளும் செவிசாய்க்கவில்லை; தமிழக / இந்திய அரசும் கண்டுகொள்ளவில்லலை. கணிப்பொறி அறிவு மிக்கோர் இதனைப் பொருட்படுத்தவில்லை. இன்ன வழிமுறையில் இதைத்தடுக்கலாம் என்று வழிகாட்டியிருக்கலாம், ஊடகங்கள் வாயிலாக. தமிழகத்தில் அம்மா திட்டம் நடைமுறைப்படுத்தத் துவங்கியபோது, ஓசூரை மையமாகக் கொண்டு இயங்கிவரும் கேர் சொஸைட்டி பொறுப்பாளர் வாரண்ட் பாலா தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியும் பயனில்லை. நாம் கூகிளைப் புறக்கணித்துப் புதிய தேடுபொறியை நமது நாட்டிற்கென்றே கண்டாகவேண்டும். இதைச் சீனா செய்தது. சீன நாட்டிற்குள் கூகிள் தலைகாட்ட முடியாது. அவர்கள் புதிய பாதையைக் கண்டுபிடித்துவிட்டனர்.
தற்போது இளையதலைமுறை நூலின் ஆசிரியர் என்.எம்.கோபிநாத் மேற்படி நூலில் அட்டகாசமாகத் தடுக்கும் வழியைத் தெரிவித்துள்ளார். மேலும் இப்புத்தகம் படம் பார்த்துக் கதை சொல்லும் உத்தியில் தமிழ்/ மற்றும் ஆங்கிலத்தில் வந்துள்ளது. அவர்தம் முயற்சிக்கு நம் ஆதரவைத் தருவது நமது கடமை.
வந்தபின் காப்பதைவிட வருமுன் தடுக்க வழியே இல்லையா கணினி வல்லுநர்களே ?
முதலில் டெலிவிஷம் -டெலிவிஷன் - நடுவீட்டிற்குள் வந்து அபத்தமான தகவல்களை ஒலி /ஒளி பரப்புவதைத் தடுக்கப்பாருங்கள் என்று சிலர் கூறுவது காதில் விழுகின்றது. என்ன செய்வது ? வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியத் திருநாட்டில் அல்லவா நாம் வாழ்கின்றோம் !
நதிகளைத் தேசியமயமாக்கிவிட்டுத் தேர்தலை நடத்துங்கள். இல்லை என்றால் இந்தியாவிற்கு குடியரசுத் தலைவர் ஆட்சியே போதுமானது.
பாராளுமன்ற , சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு வழங்கும் சம்பளம் ......இத்யாதிச் செலவுகளாவது மிச்சப்படும் !
தொடர்புக்கு : 8012627000, 8012626222
நன்றி...
Thanks & Regards,
Gopinath. M
Founder & CEO.
Contact : +91 9976216669
Pudukkottai, Tamilnadu,
India – 622001.
No comments:
Post a Comment