Saturday, October 31, 2015

தமிழ் இலக்கியத்தில் முன்னும் பின்னும் உதாரணமற்ற அபூர்வ ராகம் லால்குடி சப்தரிஷி.ச.இராமாமிர்தம்.




லா.ச.இராமாமிர்தம்: 
பிறந்த நாள்-அக். 29, 1916 
நினைவு நாள் - அக். 29, 2007

லால்குடி சப்தரிஷி இராமாமிர்தம்



யார் இந்த லா.ச.ராமாமிர்தம்? நவீன தமிழ் எழுத்தின் தீவிரமான பகுதி பெரும்பாலும் வெகுமக்களின் ரசனை எல்லைக்கு வெளியில்தான் இருந்துவருகிறது. இதில் பல அம்சங்கள் புரிவதில்லை என்பது பெருவாரியான மக்களின் புகார். அத்தகைய புரியாத எழுத்தின் முதன்மையான உதாரணங்களில் ஒருவராக லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் அடையாளம் காணப்படுகிறார்.

சொற்கள் புரியவில்லை என்றால் அகராதியைப் பார்த்துத் தெரிந்துகொண்டுவிடலாம். வாக்கியங்களே புரியவில்லை என்றால்? ‘கண்ணின் இமையுள், விழிப்பின் முதல் உணர்வாய்க் கவிந்த இருள் முழுவே உனக்கு அஞ்சலி’ என்று ஒரு கதை (த்வனி) தொடங்கினால் எப்படி இருக்கும்? ‘கண்ணாடியில் பிம்பம் விழும் த்வனிகூட எனக்குக் கேட்கிறது’ என்று சொன்னால் அதை எப்படிப் புரிந்துகொள்வது? ஆனால், இதுபோன்ற வாக்கியங்களில் இருக்கும் வசீகரமே லா.ச.ரா-வைப் புரியாமலும் பலரைப் படிக்க வைக்கக்கூடியதாகவும் இருக்கிறது. அச்சத்தை மீறிப் பாம்பின் அழகு நம்மைக் கவர்வதுபோல.

மயக்கும் மாயம்

இரண்டாயிரம் பக்கங்களுக்கு மேல் விரியும் லா.ச.ரா-வின் எழுத்தில் சரி பாதிக்கு மேல் அடிப் படைத் தமிழ் அறிவுகொண்ட எவரும் படித்துப் புரிந்து கொள்ளக்கூடியதுதான். மீதிப் பகுதியில் பெரும் பாலானவை புரியாத நிலையிலும் வசீகரிக்கக் கூடியவை; ரசித்துப் படிக்கக்கூடியவை. ‘இது இருளின் நரம்பு, எண்ணத்தின் மணிக்கயிறு, வானத்தின் நீளத்தினின்று உரித்த பொற்சரடு’ என்பன போன்ற மயக்கும் படிமங்கள் புரியாதவை என்று சொல்வதை விடவும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பொருள் தரக்கூடியவை என்று சொல்வதே பொருத்தம்.

புரியாத நிலையிலும் மந்திரம்போல மனதில் ஒட்டிக் கொள்ளும் மாயமே லா.ச.ரா-வின் சிறப்பு. புரிவதும் புரியாததும் தற்காலிக நிலைகள். ஒரு விஷயத்தை இன்று புரிந்துகொள்ளும் விதம் நாளை மாறலாம். ஆனால், லா.ச.ரா-வின் மந்திரச் சொற்கள் தரும் மயக்கம் நீடித்து நிற்கும்.

மலை உச்சியில் பிறக்கும் நதி பல வடிவங்களையும் பெயர்களையும் எடுத்தபடி கடலை நோக்கிப் பாயும். அதன் மொத்த விகாசத்தையும் குறிப்பிட்ட வகைக்குள் அடக்க முடியாது. லா.ச.ரா-வின் எழுத்தும் அத்தகையதுதான். நனவோடை உத்தி என்று சிலர் சொல்வார்கள். ஆனால், புற உலகில் வேர் கொண்டு சம்பவங்களால் நகர்ந்து செல்லும் வலுவான யதார்த்தக் கதைகளையும் அவர் எழுதியுள்ளார். புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட அனுபவங்களைக் கதையாக்குபவர் என்று சொல்லலாம் என்று பார்த்தால், வலுவான தர்க்கம் பல படைப்புகளில் அடிச்சரடாக ஓடிக்கொண்டிருப்பதையும் உணர முடிகிறது. கூட்டுக் குடும்பத்தின் ஆராதகர் என்று சொல்லச் சிலர் முனைந்தால், குடும்பத்திலிருந்து முரண்படும் தனிநபர் உணர்வை முன்னிறுத்தும் கதைகள் நம்மைப் பார்த்துச் சிரிக்கும். சவுந்தர்ய உபாசகர் என்று சொல்லலாம். ஆனால், வேதனைகளின் கதையையும் இவர் எழுதிவைத்திருக்கிறார். அன்பின் உன்னதமும் பேசுவார். சுயநலத்தின் தவிர்க்கவியலாத தன்மையையும் காட்டுவார். பெண்களை சக்தியின் வடிவமாகப் பார்ப்பவர், அவர்களது சுயநலத்தையும் வன்மத்தையும் கண்டு பாராமுகமாக இருப்பதில்லை.

அழகின் கோலங்கள்

லா.ச.ரா-வுக்குக் கதை என்பது அவரது தேடலின் கருவிதான். தேடல் என்பது அன்றாட வாழ்வில் மறைந்திருக்கும் தெய்விகத் தருணங்களின் மகிமையைக் கண்டுணர்தல். கதையம்சம் என்பதைவிடவும் கதையின் வாழ்வம்சத்துக்கும் அதனுள் ஒளிரும் சத்தியத்தின் தரிசனத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் லா.ச.ரா. மனித உணர்வுகள் அவருக்கு மிகமிக முக்கியம். மதிப்பீடுகளின் தராசில் வைத்து உணர்வுகளை அளப்பவர் அல்ல அவர். லா.ச.ரா-வின் பாத்திரங்கள், கருவறை, சுடுகாடு, பூஜையறை, படுக்கையறை, தோட்டம், சந்தை என எல்லா இடங்களிலும் உண்மையின் தரிசனத்தைக் கண்டு நெக்குருகுகிறார்கள். புலன்களைத் தாண்டிய அனுபவங் களையும் அந்த அனுபவங்கள் வெளிப்படும் தருணங் களையும் கண்டு நமக்கும் காட்டுகிறார் லா.ச.ரா.

பச்சைக்கனவு, கஸ்தூரி, சுமங்கல்யன், பாற்கடல் போன்ற கச்சிதமான யதார்த்தக் கதைகளைப் படைக்கும் திறன் கொண்ட இவர், படைப்பின் கட்டற்ற போக்குக்கு வழி விட்டுக் கதையின் கட்டமைப்பைத் தியாகம் செய்யவும் தயங்குவதில்லை. ஒவ்வொரு படைப்பும் எதைக் கோருகிறதோ அதைத் தருவதே ஒரு படைப்பாளியின் வேலை என்று நம்புபவர் லா.ச.ரா. அதனால்தான் அவரது பல கதைகளின் குவிமையம் சிதறுகிறது. சிறுகதைகளின் ஆதார பலமான குவிமையம் சிதறும்போது அதைப் பின் தொடர்ந்து செல்வது வாசகருக்குச் சிரமமாக இருக்கும். ஆனால், கிளை பிரியும் பாதைகளில் வெளிப்படும் தரிசனங்கள் படைப்பின் ஒவ்வொரு வரியையும் மதிப்பு வாய்ந்ததாக ஆக்குவதையும் உணரலாம். ஒளிக் குவியத்தின் அழகைப் பல படைப்புகளில் தரும் இவர், ஒளிச் சிதறலின் எண்ணற்ற அழகுக் கோலங்களையும் காட்சிப்படுத்துகிறார். இத்தகைய எழுத்தைப் படிக்கும்போது கதையம்சத்தின் எல்லை களைத் தாண்டி வாசக மனம் பயணிக்கிறது. அந்தப் பயணம் படைப்பாளியின் பயணத்துக்கு இணை யான பயணமாகி, படைப்பின் தரிசனத்தை விரிவு படுத்துகிறது.

‘உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் நெருப்பு என்று எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்’ என்று ஒருமுறை எழுதிய லா.ச.ரா. ஒவ்வொரு சொல்லுக்கும் முக்கியத்துவம் அளிப்பதை உணர முடியும். ‘வாசனாதி திரவியங்களின் மணத்தைத் தமிழாக்கிக் கொண்டுவந்தவர் லா.ச.ரா.’ என்று சுந்தர ராமசாமி எழுதியிருப்பது இவரது சொல்லழகு தரும் மயக்கத்தைக் கச்சிதமாக உணர்த்துகிறது.

லா.ச.ரா-வின் அபூர்வ ராகம்

சொல்லழகும் மெய்ப்பொருள் தேடலும் தரும் தரிசனங்களின் படைப்பனுபவம் என்று லா.ச.ரா-வின் கதைகளை ஒருவாறாக வரையறுக்கலாம். பாற்கடல், கஸ்தூரி போன்ற யதார்த்த வாழ்க்கைச் சித்திரங்கள்; புரிந்துகொள்ள முடியாத ஆளுமை விசேஷங்களை மையப்படுத்தும் அபூர்வ ராகம், தாட்சாயணி போன்ற சொல்லோவியங்கள்; யோகம், புற்று போன்ற கால, இட எல்லைகளை மீறி வெளிப்படும் தரிசனங்கள் எனப் பல தளங்களில் இயங்குபவை லா.ச.ரா-வின் கதைகள். உறவுகளின் மேன்மையையும், அவற்றின் சிக்கல்களையும், இணைந்து வாழும் விழைவையும், பிரிந்து செல்லும் வேட்கையையும், தனிமையின் சுமையையும் அதன் மகத்துவத்தையும் பேசுபவை இவரது கதைகள்.

கதைகளைச் சொல்வதைவிடவும், கதைகளை முன்வைத்து வாழ்க்கையின் மாயத் தருணங்களைக் கண்டுணர்ந்து வியப்பதும் வியக்கவைப்பதும்தான் ராமாமிர்தத்தின் எழுத்து. அந்தத் தருணங்களில் தோய்ந்து மாறுபட்ட அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவது ராமாமிர்தத்தின் எழுத்து. படைப்புகளில் அனுபவிக்கக் கிடைக்கும் மாயத் தருணங்களுக்காகவும் அவை முன்வைக்கப்படும் கவித்துவச் சொல்லழகின் வசீகரத்துக்காகவுமே இவரது கதைகள் என்றென்றும் படிக்கப்படும். சம கால யதார்த்த வாழ்வில் வேரூன்றிய கதைகள் பல சமயம் கால வெள்ளத்தில் நிற்காமல் போய்விடலாம். ஆனால், காலம், இடம் ஆகியவற்றைத் தாண்டிய தருணங் களைப் படைப்பாக்கும் எழுத்து காலம் தாண்டியும் வாழும். லா.ச.ரா-வின் எழுத்து காலம், இடம் ஆகிய வற்றை மட்டுமல்லாமல், புலன்களை மீறிய அனுபவங் களையும் சாத்தியப்படுத்துபவை. அதனாலேயே அவர் தரும் மந்திரத் தருணங்கள் நித்தியத்தன்மை பெற்றிருக்கின்றன.

அபூர்வ ராகம் கதையை இப்படித் தொடங்குகிறார்: ‘வீணையின் ஸ்வரக் கட்டுகளை விருதாவாய் நெருடிக் கொண்டிருக்கையில், திடீரென்று ஒரு வேளையின் பொருத்தத்தால் ஸ்வரஜாதிகள் புதுவிதமாய்க் கூடி ஒரு அபூர்வ ராகம் ஜனிப்பதுபோல் அவள் என் வாழ்க்கையில் முன்னும் பின்னுமில்லாது முளைத்தாள்.’ லா.ச.ரா-வும் இந்தப் பெண்ணைப் போலத்தான். இலக்கிய உலகில் முன்னும் பின்னும் யாருமற்ற அபூர்வ ராகம்.

- அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

நன்றி : தி இந்து

இந்தியா ஏன் மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும்? - வி.ஆர். கிருஷ்ணய்யர்



ஆன்மிக நோக்கில் ஒரு புரட்சிகரமான பார்வையை, விரிந்தளாவிய மனப் பக்குவத்தை இந்தியாவுக்கு வழங்கிய விவேகானந்தரின் சிந்தனைகளின் தொடர்ச்சியாக நீதிநாயகம் வி.ஆர். கிருஷ்ணய்யர் திகழ்கிறார். இந்தியா ஏன் ஒரு மதச்சார்பின்மை நாடாக இருந்தாக வேண்டும் என்பதற்கு இந்த இருவருமே இந்திய ஆன்மிக மரபைத் துணைகொண்டு விளக்கம் தருகிறார்கள்.

இந்திய வரலாற்றை மதமோதல்களின் வரலாறாக மாற்றுவதற்குப் பல்வேறு தரப்புகளிலுமுள்ள சிறிய பகுதியினர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குப் பெரும் மனத்தடைகளை ஆன்மிக, சமூக மரபின் வழியாகவே உருவாக்குகிறது இந்த நூல்.

புரட்சிகர மனிதாபிமானியான எம்.என். ராய், “மரபுச் செல்வங்களின் பெருமையை உணர்ந்து போற்ற இயலாமைதான் நம் கால கட்டத்தின் மகத்தான நெருக்கடி” என்று சாடிவிட்டு, மதச்சார்பின்மை நவீன அறிவியல் உலகின் சமூகக் கலாச்சாரத் தேவை என வரையறுக்கிறார். மதச்சார்பற்ற நாடு எனும்போது பலரும் எதிர்கொள்ளும் சிக்கல், தம் மதத்தைத் தானும் தனது நாடும் துறந்துவிட வேண்டும் என்று இந்தக் கருத்து வலியுறுத்துகிறதோ என்கிற அச்சம் மேலிடுவதால்தான். ஆனால் இந்தியச் சமூகப் பார்வை கொண்ட ராய், மதத்தை அதன் உண்மையான லட்சியத்தை வளர்க்கும் கருவியாகப் பயன்படுத்த ஊக்கமளிக்க வேண்டும், அறம் சார்ந்து செயல்படும் சுதந்திரமும் பகுத்தறிவும் கொண்டதாக இருக்க வேண்டுமென வரையறுக்கிறார்.

இதன் வழியாக இந்தியா தனது சுதந்திரத்தை மதச்சார்பின்மை எனும் மாமருந்துகொண்டே எட்ட முடியும் என கிருஷ்ணய்யர் கூறுகிறார். இதன் மறுபக்கம் சிறுபான்மை மதவாதத்துக்கு ஆதரவாய் இருப்பதுவும் அல்ல. இங்கு நேரும் குழப்பத்தை அகற்ற அவர் மூன்று வகைகளில் முயற்சி செய்கிறார். அறிவியல், ஜனநாயகம், இந்திய ஆன்மிக மரபு எனும் முப்பெரும் பார்வைகளால் தன் கருத்துக்களைச் செம்மை செய்து அறிவும் மனிதநேயமும் இணைந்து நிற்கிற பகுதியாக ஆக்குகிறார்.

அறிவியலிலும் ஜனநாயக சோஷலிசத்திலும் இன்னும் கைப்பக்குவம் இல்லாத இந்திய உளவியலைச் சமைப்பதற்காக அவர் இந்திய ஆன்மிக மரபை முன்வைக்கிறார். இதன் வாயிலாக மதச்சார்பின்மை ஓர் இயற்கையான முகிழ்ப்பு என நிறுவப்படுகிறது; அது வலிந்து இந்திய அரசமைப்புச் சட்டத்துக்குள் சொருகப்படவில்லை.

இந்தியாவின் தனித்த அரசியல் மற்றும் சமூக வளர்ச்சிக்கு ஒவ்வொருவரின் பங்களிப்பும் தேவை. இதற்கு கிருஷ்ணய்யர் முன்வைக்கும் வாதம் அருமையானது. நம்மை ஒருவர் வழிநடத்திச் செல்வதைவிட நாமே நம்மை வழிநடத்தக் கோருகிறார்: “நாம் வெறும் பயணிகள் அல்ல; நாமே மாலுமிகள்; நமது கப்பல் எந்தக் கரையைச் சேரவேண்டும் என்பதை நாமே முடிவு செய்ய வேண்டும்.”

மதச்சார்பின்மையைச் சட்டமன்றத் தீர்மானத்தாலோ அரசின் ஆணைகளாலோ வளர்த்துவிட முடியாது. இதைத் தெரிந்துகொண்ட நிலையில் மதச்சார்பின்மைத் தத்துவத்துக்கு நாடு, நாட்டின் ஐக்கியம், வளர்ச்சி, பின் அதற்கான ஆன்மிக உள்ளுறை என்று நாலா பக்கங்களிலும் அதனைச் செப்பமுறச் செதுக்குகிறார் கிருஷ்ணய்யர். இவை சமூக விஞ்ஞானத்தின் கண்ணிகளாக நம்மைச் சூழ்கின்றன.

இங்கு மதம் சார்ந்த வெறுப்புகள் ஏன் விதைக்கப்படுகின்றன, அவற்றின் உண்மையான நோக்கம் என்ன, இவற்றால் ஆதாயம் அடைகிற சக்திகள் எவை, அவை எங்கே இருக்கின்றன என்றெல்லாம் கிருஷ்ணய்யர் எழுப்பும் கேள்விகள் நம் மனசாட்சிக்கு அழைப்பு விடுக்கின்றன. “செத்த பன்றியும் பசுவும்கூட நம் குடியரசை நடுநடுங்கச் செய்கிறதே, இதைக் கண்டு சிரியுங்கள்” என்று கிருஷ்ணய்யர் சொல்கிறார். அது சிரிப்பதற்கான வாய்ப்பு அல்ல, நம் மனசாட்சிக்கு விடுக்கப்படும் சவால்.

- களந்தை பீர்முகம்மது

யார் வாழ்வார்கள் மதச்சார்பற்ற இந்தியா வீழ்ந்தால்,
நீதிநாயகம் வி.ஆர். கிருஷ்ணய்யர் 
வெளியீடு : நீதிநாயகம் சிவராஜ் வி. பாட்டில் ஃபவுண்டேசன், 
நீதிபதி பகவதி பவன், 
143 ஏரிக்கரை சாலை, 
கே.கே. நகர், மதுரை - 625 020 
நன்கொடை : ரூ. 50

Keywords: புத்தக அறிமுகம், இந்திய வரலாறு, மதச்சார்பின்மை, மதச்சார்பற்ற இந்தியா, இந்தியா வீழ்ந்தால், வி.ஆர். கிருஷ்ணய்யர்

நன்றி :- தி இந்து

சிறுபாணாற்றுப்படை – சிறுபாணன் செல்வழி – ஒரு படவிளக்க உரை



Pandiyaraja <pipiraja@gmail.com>: Oct 30 10:15PM -0700 

அன்புடையீர்!
குறிப்பிட்ட நாளுக்கு ஒருநாள் முன்னதாகவே வருகிறது சிறுபாணாற்றுப்படை 
முதற்பாடம். செரிக்க நேரமெடுக்கும் என்ற காரணத்தால் கொஞ்சமாகவே 
கொடுத்திருக்கிறேன். அதனால்தான் இத்துணை சீக்கிரம். பழகப் பழக அகப்பை 
பெரிதாகும். வந்து விழுவதும் அதிகமாகும்.
நன்றி.
சுவைத்துவிட்டுச் சொல்லுங்கள். அருமையான உணவு எனில் அதை ஆக்கியவருக்குத்தான் 
பெருமை. எடுத்துப்போட்டவருக்கு அல்ல. 
ப.பாண்டியராஜா
 
*மாநில மடந்தை*
 
மிகவும் அழகான ஓர் உருவகத்துடன் தன் பாடலைத் தொடங்குகிறார் சிறுபாணாற்றுப்படைப் புலவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார். இந்தப் பெரிய நிலவுலகத்தை ஒரு மடந்தையாகப் பார்க்கிறார் அவர். தம் பாடலின் தொடக்கக் காட்சியாக அவர் நம் கண்முன் காட்டுவது நெடுந்தொலைவில் நீண்டுகிடக்கும் ஒரு நெடிய மலைத்தொடர். அந்த மலைத்தொடரை மாநில மடந்தையின் பருத்த தோள்களாகக் காட்டுகிறார் அவர்.
 
அந்த மலையினின்றும் இழிந்து வருகிறது ஓர் காட்டாறு. மலை முகடுகளினின்றும் தாவிக் குதித்து வரும் இந்தக் காட்டாறு, அந்த நில மடந்தையின் மார்புகளினின்றும் கீழே விழுந்து அசைந்துகொண்டிருக்கும் முத்து மாலையைப் போன்று இருக்கிறதாம். தாவிவிழும் அந்தக் காட்டாறு இருமருங்குப் பாறைகளிலிலும் முட்டிமோதி அல்லல்பட்டு, பின்னர் நெடுந்தொலைவு பயணம்செய்து நாட்டுக்குள் வரும்போது முற்றிலும் காய்ந்துபோன ஆறாக மாறிநிற்கிறது. 
 
கருமணல் நிறைந்த காய்ந்துபோன காட்டாறு நிலமடந்தையின் கூந்தல் விரிந்து கிடப்பதைப் போல் பரந்து கிடக்கிறது. கரையோரத்து மரங்களில் குயில்கள் குத்திக்குடைவதால் உதிர்ந்த பூக்கள் அந்த மணற்கூந்தலில் சூடிய மலர்களாய்க் காட்சியளிக்கின்றன. ஆற்றின் ஓரங்களில் அலையலையாய்க் கிடக்கும் நுண்ணிய கருமணல், நிலமடந்தையின் தலைப்புறத்தில் நீண்டு சுருண்டுகிடக்கும் மயிர்ச்சுருளாய்த் தெரிகின்றன.
 
இதோ இந்த உருவகத்தைப் புலவரின் சொற்களில் படியுங்கள்:-
 
மணி மலைப் பணைத் தோள் மா நில மடந்தை
 
அணி முலைத் துயல்வரூஉம் ஆரம் போலச்
 
செல் புனல் உழந்த சேய் வரல் கான்யாற்றுக்
 
கொல் கரை நறும் பொழில் குயில் குடைந்து உதிர்த்த
 
புதுப் பூஞ் செம்மல் சூடிப் புடை நெறித்துக்
 
கதுப்பு விரித்து அன்ன காழ் அக நுணங்கு அறல்
 
இதன் அடிநேர்ப் பொருள்:
 
(பச்சை)மணியாகிய மலையே தோள்களாகவுள்ள பெரிய நிலமாகிய மகளின்
 
அழகிய முலையின்கண் கிடந்து அசைந்துநிற்கும் முத்துமாலை போல,
 
ஓடுகின்ற நீர் வருந்தின, தொலைவினின்றும் வருகின்ற, காட்டாற்றின்
 
இடிகரையில் உள்ள மணமிக்க பொழிலிடத்தே குயில்கள் (அலகால்)குடைந்து உதிர்த்த
 
புதிய பூக்களாகிய வாடலைச் சூடி, (தம்)பக்கங்களில் அறல்பட்டு, 
5
 
தலைமயிர் விரித்ததைப் போன்ற கரியநிறத்தைக் கொண்ட நுண்ணிய கருமணல்,
 
இனி, இந்த உருவகத்தை ஒவ்வொரு அடியாகவும், ஒவ்வொரு சொல்லாகவும் எடுத்து அசைபோடுவோம்.
 
முதல் இரு அடிகளை முற்றிலும் வேறாக உரைகாரர்கள் பிரித்துக் கூறுவர்.
 
‘பணைத்தோள் மாநில மடந்தை, மணிமலை அணிமுலைத் துயல்வரும் ஆரம்போல’ என்று மணிமலையை அணிமுலைக்கு உருவகமாகக் கொள்வர். ஒரு பாடலில் எடுத்த எடுப்பில் முதல் அடியை ஒடித்து மடக்கி இவ்வாறு பொருள்கொள்ளும் வண்ணம் ஒரு புலவர் பாடியிருப்பாரா என்பது ஐயமே. மேலும் இவ்வாறு கொள்வது உருவகத்தின் ஒட்டுமொத்தப்பார்வைக்கு உகந்ததாக இல்லை என்பது என் கருத்து. எனவேதான் மணிமலை என்பது பணைத்தோளுக்கு உருவகமாகக் கொள்ளப்பட்டுள்ளது. 
 
பணை என்பதற்கு மூங்கில் என்ற பொருள் இருந்தாலும், இங்கு பருமை என்ற பொருளே பொருத்தம் எனத் தோன்றுகிறது. பச்சை மரங்களால் போர்த்தப்பட்ட மலைத்தொடரை மணி மலை என்கிறார். மணி என்பது எந்த விலையுயர்ந்த கல்லாகவும் இருக்கலாம். இங்கு அது மரகத மணி. 
 
*மணி மிடைந்து அன்ன குன்றம் கவைஇய* - அகம் 14/4
 
என்று அகநானூற்றில் வருவதைக் காணலாம். எனவே பச்சை மரகதத்தைப் பதித்தது போன்ற 
பச்சைப்பசேலென்ற நெடிய மலையே நிலமடந்தையின் தோள்களாம். இதனையே உருவகமாக,
 
மணி மலைப் பணைத் தோள் மா நில மடந்தை
 
என்கிறார் புலவர். இதோ (பச்சை மரகத)மணி மலையைப் பாருங்கள்.


 
 
 
சரி, இது எப்படி ஒரு மங்கையின் தோளாகும்? இந்த மலையையே ஒரு நெடிய 
மலைத்தொடராகப் பாருங்கள். அந்த மலைத்தொடரே பருத்த தோள்களாம். இதோ அந்தத் தோள்.

 
 
இங்கே இந்த மலைத்தொடரை அடுத்திருக்கும் மலை முகடுகள்தான் மங்கையின் முலைகள் 
என்பதை வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அது உருவகத்தின் நீட்டிப்பாகவே 
அமைகிறது. இவ்வாறு சொல்வது ஏகதேச உருவகம் ஆகும் என்பர்.
 
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
 
இறைவனடி சேரா தார் – குறள் 1:10
 
என்ற குறளில் பிறவியைப் பெருங்கடல் என்றவர், இறைவன் அடியே அதனை நீந்திக் கடக்க 
உதவும் தெப்பம் என்று கூறவில்லை. இதைப்போலவேதான் நெடுமலையைத் தோளாகச் சொன்னவர் 
அதனை அடுத்திருக்கும் சிறுகுன்றுகளை மார்புகளாகச் சொல்லவில்லை. 
 
மலை முகடுகளை மார்புகளாகச் சொல்லாமற் சொன்னவர், அந்த மார்பிலாடும் ஆரமாக 
ஆற்றினைச் சொல்லவில்லை என்பதைக் கவனிக்கவேண்டும். மாறாக அதனை ஓர் உவமம் 
ஆக்குகிறார். முதலில், ஒரு தொலைவுக் காட்சியாக, மார்பிலிருந்து தொங்கும் 
மாலையை மலைகளினூடே பாய்ந்துவரும் காட்டாறாகச் சொன்ன புலவர், பின்னர் 
அண்மைக்காட்சியாக அதே ஆற்று மணற்பரப்பை மடந்தையின் கூந்தலுக்கு (கதுப்பு 
விரித்தன்ன) உவமையாக்குகிறார். ஏதேனும் ஓரிடத்தில் இதனை உருவகம் 
ஆக்கியிருந்தால் அடுத்த இடத்தில் அது உருவக நீட்சியாக இல்லாமற் இடர்ப்படும் 
என்றே, ஆற்றினைப்பற்றிய இரண்டு இடங்களிலும் புலவர் அதனை உவமைகளாகக் 
கூறியுள்ளார் எனலாம். 
புலவர் காட்டாற்றை, ‘அணி முலைத் துயல்வரூஉம் ஆரம் போல‘ என்று கூறுகிறார். 
துயல்வருதல் என்பது முன்னும் பின்னும் ஆடுதல். இந்தச் சொல்லுக்கு இங்கு என்ன 
வேலை? மார்பின் இருபக்கங்களினின்றும் இறங்கித் தொங்கி முன்னும் பின்னும் 
ஆடிக்கொண்டிருக்கும் மாலையைப் போன்ற காட்டாறு எப்படியிருக்கும்? ஒன்றை நாம் 
கவனிக்கவேண்டும். இது தொலைவுக்காட்சி. எனவே தூரத்து மலையில் இப்படி ஒரு 
காட்சியைப் புலவர் பார்த்திருக்கவேண்டும். அவர் பார்த்த காட்சி என்னவாக 
இருக்கும்? அடுத்தடுத்த இரண்டு மலைச்சரிவுகளிலிருந்து இறங்கி வரும் இரண்டு 
காட்டாறுகள் அடிவாரத்தில் ஒன்றாய் விழுந்து, பின் எழுந்து முன்பக்கமாய்ச் 
சிறிது ஓடித் தாவிக்குதிக்கிறது என்று கற்பனைசெய்துகொள்ளலாம். இதோ பாருங்கள் 
ஒப்புமையை:-
 
 
ஆக, இவ்வாறு குதித்துக் குதித்து வரும் காட்டாறினையே புலவர் துயல்வரும் 
மாலைக்கு உவமையாகக் கூறியிருக்கிறார் எனலாம்.
 
அடுத்து, செல்புனல் உழந்த சேய்வரல் கான்யாறு என்பதை, செல் புனல் உழந்த 
கான்யாறு, சேய்வரல் கான்யாறு என இரண்டாகப் பிரிக்கலாம். பாறையிடுக்குகளில் 
அடித்துக்கொண்டும், மோதிக்கொண்டும் வரும் ஆற்றையே செல் புனல் உழந்த என்கிறார். 
உழந்த என்றால் வருந்திய என்று பொருள். தொலைதூரத்திலிருந்து அந்த ஆறு வருவதாகப் 
புலவர் கூறுகிறார். சேய் என்பது சேய்மை என்ற பொருளில் மிகுந்த தொலைவைக் 
குறிக்கும். மலையை விட்டிறங்கி வெகுதூரம் கடந்து வந்த ஆற்றின் கரையில் இப்போது
Malarvizhi Mangay <malarmangay64@gmail.com>: Oct 31 12:13PM +0530 

Picture comparisons are super.
 

Friday, October 30, 2015

அழகி (மென்பொருள்)




அழகி என்பது கணினியில் இந்திய மொழிகளின் எழுத்துக்களை தட்டெழுதவென, பா. விசுவநாதன் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு இலவசமென்பொருளாகும். இது ஆரம்ப காலத்தில் தமிழ் மொழிக்கு மட்டும் பயன்பட்டது, தற்போது, இந்திசமஸ்கிருதம்தெலுங்குகன்னடம்மலையாளம்,மராத்திகுஜராத்திபெங்காலிபஞ்சாபி உள்ளிட்ட 13[1] மொழிகளிலும் இக்கருவியை பயன்படுத்தி தட்டச்சு செய்யலாம். த இந்து நாளிதழ் 2002-ம் ஆண்டு, இம்மென்பொருளை, “ஒப்பற்றது” (stand out) என்று குறிப்பிட்டுள்ளது.[2] ஒவ்வொரு எழுத்துக்கும் உரிய ஒலிவடிவைத் தரக்கூடிய ஆங்கில எழுத்துக்களின் தொகுப்புகள் தெரிவு செய்யப்பட்டு அத்தொகுப்புக்களைத் தட்டெழுத, முறையான எழுத்துக்கள் கணினியில் திரையில் தோன்றும் வகையில் இம்மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டு, அழகியை உருவாக்கியதற்காக டிஜிட்டல் எம்பவர்மென்ட் பவுன்டேசன் வழங்கிய மாந்தன் விருது (Manthan Award), பா. விசுவநாதன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. [3] அதே ஆண்டில், அழகி ஒரு சிறந்த வெற்றிக் கதை என்றுமைக்ரோசாப்டின், இந்திய மொழிகளுக்கான பாஷாஇந்தியா தளத்தில் தெரிவித்திருந்தது. [4]

அழகியின் சிறப்பம்சங்கள்

திரை அமைப்பு

அழகியில் இருதிரை அல்லது ஒரு திரை முறையைப் பயன்படுத்தும் வசதியுள்ளது. இருதிரை முறையில் மேற்புறமுள்ள திரையில் நாம் தட்டெழுதும் ஆங்கில எழுத்துக்களும், கீழ்ப்புறமுள்ள திரையில் அதற்கீடான தமிழ் எழுத்துக்களும் தோன்றும். ஒரு திரை முறையில் தமிழ் எழுத்துக்கள் மட்டும் தோன்றும். அழகியின் திரை திறந்ததும் அதில் சிறிய ஒரு அட்டவணை தோன்றுகிறது. புதிதாய் அழகியை உபயோகிப்போர்அதில் காணும் தமிழ் எழுத்துக்களுக்கீடான ஆங்கில எழுத்துக்களைத் தட்டி மிக எளிதில் தமிழைக் கணினியில் எழுதலாம். அவ்வாறு எழுதியதை மின்னஞ்சல் வழியே அனுப்பும் வசதி அழகியில் உள்ளது. தற்பொழுது நடைமுறையில் வந்துள்ள ஒருங்குறி (Unicode) வகை எழுத்துக்களில் தமிழை எழுதும் வசதி அழகி மென்பொருளில் உள்ளடக்கம் செய்யப் பட்டுள்ளது.

பயன்பாடு

அழகியின் துணையோடு அழகி தவிர்த்த கணினியின் பிற பயன்பாட்டு மென்பொருட்களிலும் தமிழை உள்ளிட முடியும். அழகி மென்பொருளை முற்றிலும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

ஒலிபெயர்ப்பு

ஸ்ரீமதி என்ற சொல்லைப் பெற, srimathi, sreemathi, shrimathi, shreemathi, srimadhi, shrimadhi எனப் பல்வேறு ஆங்கிலச் சொற்களின் தொகுப்புக்களை உபயோகப் படுத்தலாம். மஞ்சு, கஸ்தூரி, மஞ்சள், சிங்கம், சங்கு, நீங்க, நாங்க, விஸ்வம், பொய், நன்றி, கற்று முதலிய சொற்களை manju, manjaL, singam, sangu, neenga, naanga, visvam, poi, nandri, katru என்று இயல்பான எழுத்துக்களைத் தட்டிப் பெறலாம். ஆங்கிலத்தில் Mr என்று தட்ட ‘ஸ்ரீ’ என்ற எழுத்து கிடைக்கிறது. நீங்க என்பதை niinga என்றும் பெறலாம்.
எங்கே, அங்கே, இங்கே, வந்தே, தந்தே, பலனே, பலமே என வரும் சொற்களை enge, engae, ange, angae, inge, ingae, vanthe, vanthae, thanthe, thandhae, palane, palanae, balame, balamae என எளிதாகப் பெறலாம் engE, angE, ingE, vandhE, palanE, balamE என்று ஷிஃப்ட் உபயோகிக்க வேண்டிய அவசியமில்லை எனினும் இவ்வாறு ஷிஃப்ட் உபயோகித்தும் பெறலாம்.
ந, ன, ண எனும் எழுத்துக்களை முறையே nha, na, Na என்று எழுதிப் பெறலாம். இவற்றுள் ஒரு வரியின் முதல் எழுத்திலும் ந வருகையில் na என்று எழுதினால் போதுமானது பிற இடங்களில் மட்டும் nha உபயோகிக்க வேண்டும்.
ஒரு வரியின் முதல் எழுத்தாக ல, ள, ழ ஆகிய எழுத்துக்களை la, La, za அல்லது zha எனத்தட்டெழுதிப் பெறலாம். ர, ற என்பவற்றை முறையே ra, Ra என்று தட்டிப் பெறலாம். கற்ற, மற்ற, சிற்றூர், பெற்றோர், முற்றம், சுற்றம் போன்ற வார்த்தைகளை katra, matra, sitruur, petroar, mutrum, sutram என எளிதில் பெறலாம். kaRRa, maRRA, siRRuur, peRRoar, muRRam, suRRam என எழுத வேண்டியதில்லை, இவ்வாறு எழுதியும் பெறலாம்.
இது போல அனைத்து விதங்களிலும் கடினமான தூக்குவிசை (shift key) உபயோகித்துப் பெறக்கூடிய வார்த்தைகள் அனைத்தையும் தூக்குவிசை உபயோகிக்காமல் எளிய வழியில் பெறுவதுடன் தூக்குவிசை உபயோகித்துப் பெறும் பழக்கமுள்ளவர்கள் தொடர்ந்து அவ்விதமே பெறவும் ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது.
ச எனும் எழுத்தை sa, cha எனும் இரு வழிகளில் பெறலாம். சச்சரவு – sachcharavu, chachcharavu, சச்சிதானந்தம் – sachchithaanandham, chachchithanandham, சச்சின் – sachchin, chachchin

ஆங்கிலச் சொற்கள்

சஸ்பென்ஸ் – saspenS, சிஸ்டம் – sistam, சிஸ்டர்
முத்தைத்தரு பத்தித் திருநகை யத்திக்கிரை சத்திச்சரவண
muththaiththaru paththith thirunhagai yaththikkirai saththichcharavaNa
முக்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
mukthikkoru viththuk kurubara enavoathum
முக்கட்பரமர்க்குச்சுருதியின் முற்பட்டது கற்பித்திருவரு
mukkatparamarkkuchchuruthiyin muRpattathu kaRpiththiruvaru
முப்பத்து முவர்க்கத் தமரரு மடிபேண
muppaththu muvarkkath thamararu madipaeNa
திக்குளெட்டுக்கைந்துக்கமுற்றுத்திடுக்கிட்டலர
thikkuLettukkainthukkamutruththidukkittalara
மைக்கடற்குட்சரந்தைக்கவிட்டோர்க்கிடமாமதுர
maikkadaRkutcharanthaikkavittoarkkidamaamathura
இக்குமுற்றிக்கணுச்சற்றுவிட்டுத்தெரித்திட்டமுத்தைக்
ikkumutrikkaNuchchatruvittuththeriththittamuththaik
கொக்குமொக்கிக்கக்கிவிக்குமச்சோலைக்குறுங்குடியே
kokkumokkikkakkivikkumachchoalaikkuRungudiyae
எட்டெழுத்தைக்கருத்திற்குறித்திட்டு நித்தம் பரவும்
ettezuththaikkaruththiRkuRiththittu niththam paravum
சிட்டர்கட்குத்திருப் பொற்பதத்தைச் சிறக்கத்தருமவ்
sittargatkuththirup poRpathaththaich chiRakkaththarumav
வட்டநெட்டைப்பணி மெத்தையத்தர்க்கிடம் வாரிசைப்பொ
vattanhettaippaNi meththaiyarkkidam vaarisaippo
குட்டினத்துக்குலந்தத்துமுத்தீனும் குறுங்குடியே
kuttinaththukkulanthaththimuththiinum kuRungudiyae

உருவாக்க குழுமம்

பா. விசுவநாதன், என்னும் ஒரு மென்பொருள் வல்லுநரால் உருவாக்கப்பட கருவியாகும். 1999-களில் சரியானதொரு தட்டெழுத்து கருவி தமிழில் இல்லை. ஒரு சில தட்டெழுத்து கருவிகளிலிருந்தும் சரியான இடைமுகப்பு இல்லாமலிருந்தது. 2000-ம் ஆண்டில் விசுவநாதன், தன்னுடைய அழகி மென்பொருளை வெளியிட்டார். தன் மனைவியின் அழகான உள்ளத்தைப் பெருமிதப்படுத்தும் வகையில் தன் மென்பொருளுக்கு ‘அழகி’ என்று பெயரிட்[தொகு]
பல்வேறு தமிழ் இணையத்தளங்களும், மென்பொருட்களும், ஆவணங்களும், தமிழில் தட்டச்சு செய்ய அழகி மென்பொருளை பயன்படுத்தி வருகின்றனர், அழகி மென்பொருளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தங்களுடைய வலைத்தளம், வலைப்பதிவு உள்ளிட்டவகைகளில் அழகி மென்பொருள் குறித்தும், அதற்கு நன்றி தெரிவித்தும் தகவலிட்டுள்ளனர்.[6] அதுமட்டுமின்றி, அழகி ஏராளமான ஒருங்குறி எழுத்துருக்களை இலவசமாக வழங்கி வருகிறது. [7], TSCII[8], TAB மற்றும் TAM தரவுகளும் இலவசமாக வழங்கி வருகிறது. பெரும்பாலான பயனர்கள் இம்மென்பொருளை பயன்படுத்த பரிந்துரைத்துள்ளதை[9]தொடர்ந்து, இதனுடைய புகழும் வளர்ந்து வருகிறது.

அங்கீகாரமும் விருதுகளும்

  • 2006-ம் ஆண்டு இருதிரை தட்டெழுத்து கருவியை உருவாக்கியதற்காக பா. விசுவநாதனுக்கு மாந்தன் விருது ( Manthan Award) வழங்கப்பட்டது[10]
  • ஜூலை 2004-ல், சென்னை ஆன்லைன் இணையம் பா. விசுவநாதனை, அழகி மென்பொருளை உருவாக்கியதற்காக கணினி வல்லுநர் என்று பாராட்டியது[11]
  • நவம்பர் 2004-ல், நிலாச்சாரல் இணையமானது, விசுவநாதனை அழகி மெபொருளை உருவாக்கியதற்காக தமிழ் வளர்க்கும் அறிஞர் என்று பாராட்டியிருந்தது.[12]

இவற்றையும் பார்க்க

குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. Jump up Same words, many languages
  2. Jump up இராமச்சந்திரன், கே. (2002-06-26), “Input English, Output Tamil”த இந்து, archived from the original on 2010-07-05, பார்த்த நாள்: 2012-04-22
  3. Jump up Manthan-AIF Award ’06 > Award Winners > Azhagi, Digital Empowerment Foundation, பார்த்த நாள்: 2012-05-15
  4. Jump up Meet Mr. Vishwanathan, Bhashaindia.com, archived from the original on 2010-12-14, பார்த்த நாள்: 2012-05-14
  5. Jump up “Innovative, despite odds”. பார்த்த நாள்: 22 April 2012.
  6. Jump up Sundaram, Introduction and thanks to Azhagi“. பார்த்த நாள் 17 May 2012.
  7. Jump up 100s of FREE Tamil Fonts (Unicode, Tscii, TAB, TAM, etc. encodings)“. பார்த்த நாள் 17 May 2012.
  8. Jump up TSCII file Description“. TSCII. பார்த்த நாள் 17 May 2012.
  9. Jump up Any other tool like e-Kalappai for typing Tamil in all applications“. பார்த்த நாள் 17 May 2012.
  10. Jump up “Manthan-AIF Award ’06 > Award Winners”The Manthan Award. பார்த்த நாள்: 17 May 2012.
  11. Jump up “Computer Expert Vishwanathan”Chennaionline.com. பார்த்த நாள்: 17 May 2012.
  12. Jump up Thamizh Valarkkum Arignar“. பார்த்த நாள் 17 May 2012.

வெளி இணைப்புகள்

Viswanathan (a z h a g i . c o m)'s profile photo