Saturday, November 7, 2015

இதுவொன்னும் பழய விசயம் இல்லீங் சாமீ... -ஆதவன் தீட்சண்யா



சாதியின் பெயரால் நிகழ்த்தப்படுகிற வன்முறைகளைப் பக்கச் சார்பு இல்லாமல் பதிவுசெய்யும் முயற்சிகள் மிகக் குறைவு. இப்படியொரு மனநிலை கொண்ட சமூகத்தில் ‘உண்மை கண்டறியும் குழுக்கள்’, மனசாட்சியின் குரல்களாகவே ஒலிக்கின்றன. அப்படியொரு குழுவில் தான் பங்கேற்றபோது எதிர்கொண்ட உண்மைகளையும் சமகால அநீதிகளையும் பதிவுசெய்திருக்கிறார் ஆதவன் தீட்சண்யா. தலைப்பே இது ஒடுக்கப்பட்டவர்களைப் பற்றிப் பேசுகிற புத்தகம் என்பதைச் சொல்கிறது.

சாதி மீறிக் காதலித்த தால் கொல்லப்பட்ட முருகேசன் - கண்ணகி வழக்கு, பரமக்குடி கலவரம், தர்மபுரி வன்முறை என்று ஒவ்வொரு அழித்தொழிப்புக்கும் பின்னால் இருக்கும் சாதிய மனப்பான்மையை மிக நேர்த்தியாகப் பதிவு செய்கிறது இந்தப் புத்தகம். ஒதுக்கீடு மூலம் தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள்கூட அவர்களிட மிருந்து எத்தனை நேர்த்தியாகக் களவாடப் படுகின்றன என்பதையும் அவர் விவரிக் கிறார். சாதி என்னும் தீப்பொறி ஒரு ஊரையே சாம்பலாக்கிவிடுகிறது. அந்தக் கரிய புகைக்கு நடுவே நின்று கொண்டிருக்கும் ஆதவன் தீட்சண் யாவின் மனநிலை அவரது எழுத்துக்களில் வெளிப்படுகிறது.

இதுவொன்னும் பழய விசயம் இல்லீங் சாமீ... 
ஆசிரியர்: ஆதவன் தீட்சண்யா 
வெளியீடு: மலைகள் பதிப்பகம் 
119, கடலூர் மெயின் ரோடு, 
அம்மாப்பேட்டை, சேலம் -3. 
தொலைபேசி: 8925554467. விலை: 130/-

Keywords: புத்தக அறிமுகம், சாதியம், சாதி கொடுமை, இதுவொன்னும் பழய விசயம் இல்லீங் சாமீ, சாதி 

நன்றி :- தி இந்து

No comments:

Post a Comment