Monday, November 16, 2015

சேந்தன் செந்தமிழ் வடமொழி -தமிழ்ச் சொற்கள் அகராதி பாம்பன் ஸ்ரீமத் - குமர குருதாச சுவாமிகள்

  உ

சேந்தன் துணை

அமைதி அம்பது என்னும்

சேந்தன்  செந்தமிழ்

இயற்றியவர்


பாம்பன்

ஸ்ரீமத் - குமர குருதாச  சுவாமிகள்

இதன்  முதற்பதிப்பிற்கு  ஆசிரியர்  இயற்றிய

முன்னுரையின்  ஒரு பகுதி  டிசம்பர் 1906

*********

வடமொழி  யொன்றையே  கற்று  அதனையே  வதந்து  கூறுநராயுள்ளாருட்  சிலர் - ) ஸம்ஸ்க்ருதம் )  சமற்கிருதமெனும்  வடமொழியிலிருந்தே 
 (  த்ராவிடம் )  திராவிடமெனுந்  தென்மொழி  யுண்டாயிற்  றென்றும்,  அதனால்  வடமொழியே  தாய்மொழி  யென்றும்,  ( தேவபாஷை )  கடவுண்  மொழி  யென்றுங்  கூறுதல்  இவ்வையகத்திலுண்டு.  அவரெல்லாம்  -  தமிழொன்றையே  விதந்து  கூறுதட்சிலர், எவ்வெத்  தென்மொழி  யெவ்யெவ்  வடமொழி  யிலிருந்துண்டாயின  வென்று  கூற  இயைகின்றனவோ  அவ்வத்  தென்மொழியிலிருந்தே  அவ்வவ்  வடமொழி  யுண்டாயின;  அவை - பெயர்,  வினை,  இடை,  உரியெனு  நாற்றிறாப்  (பகாப்பதம் )  பிரியா  மொழியும்  பொருள்,  இடம்,  பொழுது,  சினை,  பண்பு  தொழிலெனுமாறுங்  கொண்டு  வரு  (  பகுபதம் ) பிரிமொழியுமாம்.  வடமொழி  முதனிலைகளின்  பொருள்கள்  எப்படி  யிடுகுறியாயமந்துளவோ  அப்படித்தான்  தமிழ்ப்  பிரிமொழி  முன்னிலைகளுக்கும்,  பிரியா  மொழியாகும்.  இடுகுறிப்  பெயர்களுக்கும்பொருள்களமைந்துள  வெனும்  ஆற்றானும்,  தேவியாகியா  தாய்க்கு  உவப்பாயுள்ள  வடமொழிபோல,    அத்தேவியை  நீங்காத  தேவனாகிய  தந்தைக்கும்  உவப்பாய்  புதுமை  காட்டி  நிற்பது  தென்மொழியெனும்  ஆற்றானும்  த்ன்மொழி  தாய்மொழி  தய்  மொழியுந்  தந்தை மொழியுமா  மென்றும்,  குறைவில்  ( அகஸ்த்யர் )  குறுமுனிவர்க்கு  முக்கட்  கடவுளும்  முருகப்  பெருமானும்  அழகெலா  மமைய  வுணர்த்த  நின்ற  வொன்றாய்,  எஞ்ஞான்று  தென்னாடுண்டாயதோ  வஞ்சான்றே  ஆண்டுப்  பயில  வமைத்து  பரந்துளதாய்த்  திகழுந்  தென்மொழியான  தொன்மொழியான  கடவுண்  மொழியே  யாமென்றுங்  கூறுதல்  கூடு  மென்பதை  யுணராதவராவர்.

-------என்றவாறு  38  பக்கங்கள்  தொடர்கின்றன.

---------------------------------------------------------------------------------------------------------------------------

சேந்தன்  செந்தமிழ்ப்  புலன்  வனப்பு **..... அகர  முதல்.

அ     -  அ ( நகரத்தின் வழிவருமிதன் பொருள் )  அன்மை,  இன்மை, வேற்றுமை,
             குறை,  பொறையின்மை,  பகையென  அறுவகைப்படும்.*


அகங்காரம்,  அகந்தை,  ஆங்காரம்  அஹங்காரம்  -நான்னெனுஞ்  செருக்கு   

அகசு     -  அஹஸ்  =  பகற்பொழுது

அகண்டம்     -  அகண்டம்  =  எல்லாம்

அகத்தியன்   -  அகஸ்யன்  = குறுவுருவன்  (  முத்தமிழ்முனிவன் )

அகமம்  -அகமம்  =  மரம்

அகம்  =  மலை,  மரம்
அதம் = மறம்  ( தீவினை )  

---------------------------------------------------------------------------------------------------------------------------
**புலன்வனப்பு = இயற்செலல்லானியன்ற  பொருடோன்றக்  கூறல்  “தெளிவு  புலனே  தெருட்சி  போதம்”  எனும்  பிங்கலத்தைக்  கூற்றின்படி  புலன் -  அவிவாலியற்  சொல்லெனவே  கொளக்கிடப்பதாம்.

* இவ்வறுவகைகுரிய  காட்டுக்களும்  விரிவுரையும்  இந்நூலாசிரியரது   பரிபூரணானந்த  போதத்தின்  முற்படலத்துத்  99-ஆஞ்  செய்யுள்  விருத்தியுற்  கண்ணுறலாம்.

சேந்தன்  -  செவ்வேள்  -முருகன்

--------------------------------------------------------------------------------------------------------------------------

அகரத்தில்  இன்னும்  நூற்றுக்கும் மேற்பட்ட  சொற்கள்  உள்ளன.  இவ்வாறாக  இந்நூல்  அட்டையுடன்  சேர்த்து  208  பக்கங்கள்  உள்ளன.

ரூ40/-  விலையில் 1999-இல்  இரண்டாம்  பதிப்பு  வெளிவந்துள்ளது.
வெளியிட்டோர் :- அழகு  பதிப்பகம்,  20, ஆசிரியர் சங்கக்  குடியிருப்பு,  வில்லிவாக்கம், சென்னை - 600049.  
தொலைபேசி :- 26502086
கைப்பேசி :- 9444191256
----------------------------------------------------------------------------------------------------------------------------
முதற்பதிப்பு  1906- ஆம்  ஆண்டு., திசம்பர்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

க்ரியாவின்  தற்காலத்  தமிழ்  அகராதியில்  சேந்த  என்ற சொல்லும் அதற்கு ப்  பொருளும்  உள்ளது.  ஆனால்  சேந்தன்  காணப்படவில்லை.

நவீனமுறையில்  தமிழ்-தமிழ்- ஆங்கிலம் என்று அச்சிட்டு  அகராதி உலகில் புரட்சியை  ஏற்படுத்தியது க்ரியா.

மேலும் www.crea.in  இணையத்தின்  மூலம் மூன்று  மாதங்களுக்கொருமுறை  புதிய  தகவல்களயும்  சேர்த்து வருகின்றது.

எனவே, சேந்தன் செந்தமிழ்  அகராதியையும்  ஆய்வுக்கு உட்படுத்தினால்  மேலும் பல  புதிய  சொற்கள்  தமிழுக்குக்  கிடைக்கும்.

அவர்களது மின்னஞ்சலுக்கும்  இப்பதிவு அனுப்பப்பட்டுள்ளது.

creapublishers@gmail.in

நல்லது  நடக்கும் என்ற  நம்பிக்கையுடன். அனுப்பப்படுகின்றது.

---------------------------------------------------------------------------------------------------------------------------- 

           

No comments:

Post a Comment